மேலும் அறிய

Crime: சேலத்தில் பரபரப்பு... பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன் (35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன. காட்டூர் ஆனந்த் நேற்று இரவு வீட்டில் இருந்தவர்களிடம் வெள்ளியம்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். அவருடன் மற்றொருவரும் சென்றதாக கூறப்படுகிறது. காட்டூர் ஆனந்த் குள்ளம்பட்டி பக்கமுள்ள காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் அவருடைய இருசக்கர வாகனம் வழிமறித்தனர். பின்னர் அந்த மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி காட்டூர் ஆனந்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். அவருடன் வந்தவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

Crime: சேலத்தில் பரபரப்பு... பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

இதில் ரத்தவெள்ளத்தில் அங்கு சரிந்து விழுந்த காட்டூர் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அங்கிருந்து மர்ம கும்பல் கார்களில் தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்டூர் ஆனந்தனின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காட்டூர் ஆனந்தின் உடலை பார்க்க வந்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் இரவில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget