மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்க மறுக்கும் கஞ்சா விற்பனை- 2100 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்செந்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா பிடிபட்ட நிலையில் சாத்தான்குளம் 2,500 கிலோ கஞ்சா பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 2100 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்க மறுக்கும் கஞ்சா விற்பனை- 2100 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை கீரைத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்த போது கஞ்சாவை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து மதுரை கீரைத்துறை போலீஸாரை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது சாத்தான்குளம் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்க மறுக்கும் கஞ்சா விற்பனை- 2100 கிலோ கஞ்சா பறிமுதல்

அதன்பேரில் மதுரை போலீஸார் 2 வேன்களில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் பகுதியில் உள்ள அந்த தோட்டத்துக்கு வந்து, உள்ளூர் போலீஸார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு பைகளில் குவியல் குவியலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீஸார் இரவு விடிய விடிய எடை போட்டனர். மொத்தம் 2100 கிலோ கஞ்சா அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்க மறுக்கும் கஞ்சா விற்பனை- 2100 கிலோ கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சாக்கு பைகளில் கட்டி வேனில் ஏற்றி போலீஸார் நேற்று மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த 2 பேர், தூத்துக்குடியை பகுதியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரை கீரைத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை தோட்டத்தில் பதுக்கி வைத்து படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் ஒரே இடத்தில் 2100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்க மறுக்கும் கஞ்சா விற்பனை- 2100 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று முன் தினம் அப்பகுதி தோட்டம் ஒன்றில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 3 மூட்டைகளில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் திருச்செந்தூரை அடுத்து உள்ள சாத்தான்குளம் பகுதியில் தோட்டத்தில் 2100 கிலோ மதிப்புள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு அதை காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளதும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Embed widget