ரவுடி பேபி சூர்யா, சிக்கா கைது - மதுரை சைபர் கிரைம் போலீசார் அதிரடி
மாநகர் சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபிசூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா. மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. ரவுடி பேபி என்ற பெயரில் டிக்- டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.
மேலும் முக்கிய செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ABP Southern Rising Summit 2023 LIVE: ”ஊடகங்களின் ஆசிரியராக இருப்பது பிரதமர் மோடிதான்" - ஜான் பிரிட்டாஸ் எம்.பி
மக்கள் பார்வை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த சேர்ந்த பெண் சித்ரா. இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாநகர் சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர். சிக்கா மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகிய இருவரும் சமீபத்தில் வேறொரு வழக்கில் இருந்து சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.