மேலும் அறிய

Watch video: நெல்லையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை; 4 வது கடையில் சிசிடிவிவை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன்..!

3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4 வது கடையில் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.  மக்கள் கண்ணில் இருந்து தப்பினாலும் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவின் கண்ணில் இருந்து தவறு செய்பவர்கள் தப்புவது கடினம். இருப்பினும் அதனை மறந்தும், சேதப்படுத்தியும் பலர் தொடர்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் காவல்துறையினரால் பிடிபட்டு கம்பி எண்ணி வருகின்றனர்.

Watch video: நெல்லையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை; 4 வது கடையில் சிசிடிவிவை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன்..!

இந்த சூழலில் நெல்லை சந்திப்பு அருகே உடையார்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக அடுத்ததடுத்த 3 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அங்குள்ள கோழிக்கறி விற்பனை செய்யும் கடை மற்றும் டயர் விற்பனை செய்யும் கடைகள் என 3 கடைகளில் நேற்று இரவு மர்ம நபர் கடப்பாறை மூலம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளார். குறிப்பாக சிறிய கடைகள் என்பதால் அந்த கடைகளில் உள்ள  கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கடைகளை திறக்க கடைக்காரர்கள் வந்த போது அடுத்தடுத்த கடைகளில் உள்ள கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதோடு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை கைப்பற்றியதில் அதில் மர்ம நபர் ஒருவர் கையில் கடப்பாறை கம்பியுடன் ஆமை போல் கடை முன்பு சென்று சுற்றி பார்த்துவிட்டு கையில் இருந்த கடப்பாறையால் பூட்டை உடைப்பது தெரிய வந்தது. குறிப்பாக 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4வது கடை முன்பு நின்று கடப்பாறையால் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து  நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன மதிப்பு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கணவரின் போனில் இருந்த நிர்வாண வீடியோக்கள்... 3 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படியா முடியணும்
கணவரின் போனில் இருந்த நிர்வாண வீடியோக்கள்... 3 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படியா முடியணும்
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
Dharapuram: 3.30 மணிக்கு வரும் விஜய்.. காலையிலேயே குவிந்த தவெக தொண்டர்கள்.. திணறும் தாராபுரம்!
Dharapuram: 3.30 மணிக்கு வரும் விஜய்.. காலையிலேயே குவிந்த தவெக தொண்டர்கள்.. திணறும் தாராபுரம்!
சமையல் எரிவாயு: 250% கூடுதல் விலை! எண்ணெய் நிறுவனங்களின் லாபவெறிக்கு அன்புமணி கண்டனம்
சமையல் எரிவாயு: 250% கூடுதல் விலை! எண்ணெய் நிறுவனங்களின் லாபவெறிக்கு அன்புமணி கண்டனம்
ஒரே சார்ஜில் 165 கி.மீ. மைலேஜ்.. அறிமுகமாகப்போகுது Ultraviolette Shockwave இ பைக்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 165 கி.மீ. மைலேஜ்.. அறிமுகமாகப்போகுது Ultraviolette Shockwave இ பைக்! விலை எவ்ளோ?
Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
Ration Card Suspension : நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
Lpg Cylinder Subsidy : நாளை முதல் சமையல் சிலிண்டர் புக் செய்ய முடியாது.! வெளியான ஷாக் நியூஸ்- யாரெல்லாம் தெரியுமா.?
நாளை முதல் சமையல் சிலிண்டர் புக் செய்ய முடியாது.! வெளியான ஷாக் நியூஸ்- யாரெல்லாம் தெரியுமா.?
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget