பருவத மலையில் காதல் ஜோடி தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
சடலமாக மீட்கப்பட்டவர் ராஜசேகர் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார் இதில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தேவிக்கும் ராஜ் சேகரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த உலக பிரசித்தி பெற்ற பருவத மலை கடல் மட்டத்திலிருந்து 4,568 அடி உயரத்தில் பிரம்மா அம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மலை சுற்றுவதும் சாமி தரிசனம் செய்வதும் வழக்கம். தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு, மூன்று நாட்கள் மலையேற தமிழ்நாடு அரசு தடை விதித்து இருந்தாலும் பௌர்ணமி மட்டுமின்றி அனைத்து தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வருகின்றனர்.
அதனை தொடர்நது பருவதமலையில் அப்பகுதியில் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று வருவது வழக்கமாக உள்ளது. தற்போது பருவதமலை உச்சிக்கு சென்று வந்த காதல் ஜோடி பாதி மலையில் (சுமார் 3100 அடி உயரத்தில்) கால்நடை மேய்ச்சலில் ஈடுப்படு கொண்டிருந்த போது திடீரென அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக அவர்கள் அங்கு சென்று பார்த்த போது காதல் ஜோடி புடைவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இறந்து பலநாட்கள் ஆகியதால் உடல் அழுகிய நிலையில் இருப்பதாக கால்நடை மேய்பவர்கள் கடலாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்த கடலாடி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கூலியாட்களை அழைத்து கொண்டு தூளி கட்டி இறக்க கடலாடி வழியாக பருவதமலை மேலே சென்றனர். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் உடல் இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் சடலத்தை மீட்கப்பட்ட இடத்தில் கைப்பற்றி இரண்டு வழிகளில் காவல்துறையினர் சோதனை செய்ததில் அதில் இருந்த ஆதார் அட்டைகளை வைத்து நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ஜோடி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் ராஜசேகர் வயது (46), (ஏற்கனவே திருமணமானவர்) சொந்தமாக பிரின்டிங் பிரஸ் வைத்து தொழில் செய்து வருகிறார். அவரது பிரின்டிங் பிரசில் பணிபுரிந்த தேவி வயது (24), திருமணமாகாதவர், இவர்கள் இரண்டரை மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தொடர்பு கொண்டு திருவண்ணாமலை காவல்துறை தகவல் தெரிவித்தனர். அப்போது கடந்த 40 நாட்களாக முன்பு இருவரும் மாயமானது அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தேடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சடலமாக மீட்கப்பட்டவர் ராஜசேகர் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார் இதில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தேவிக்கும் ராஜ் சேகரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இதையறிந்த ராஜசேகரன் மனைவியும், தேவியின் குடும்பத்தினரும் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர்
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கிடையே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பருவதமலை உச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மரணங்கள் ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் முதல் பொதுமக்கள் வரை வேதனை அடைந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இந்து சமய அறநிலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு.