மேலும் அறிய

அரைநிர்வாணமாக எரிந்துகிடந்த ராமேஸ்வர மீனவப்பெண்! வட மாநிலத்தவர்களிடம் விசாரணை!

ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் செய்து படுகொலை செய்யப்பட்டார்

மீனவ கிராமம்..

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றது. இங்குள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழில் பிரதானமாக செய்து வருவதோடு பெண்கள்  கடலுக்குச் சென்று கடல் பாசி சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது மதிப்புடைய பெண் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.

கேலி, கிண்டல்..

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் பாசி சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள்  சந்திரா என்ற மீனவப் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்ற போது இறால் பண்ணை அருகே மீனவ பெண் சந்திராவை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து  படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. 

இதையடுத்து உயிரிழந்த மீனவ பெண் சந்திராவின் உடலை மறைக்கும் நோக்கத்தோடு அடையாளம் தெரியாத நபர்கள்  தீ வைத்து உடலை எரித்துள்ளனர். அதில் சந்திராவின் உடல் நிர்வாணமாக அரைகுறையாக எரிந்து கிடந்துள்ளது.

இதையடுத்து வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்று மாலை 4 மணிக்கு வீடு திரும்ப வேண்டிய சந்திரா வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடல்பகுதியில் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர் உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடிக்கொண்டிருந்த போது அவருடன் வேலை பார்க்கும் பெண்களிடம்  விசாரித்த போது கடந்த இரண்டு நாளுக்கு முன்பு இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வட மாநிலத்திலத்தவர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இறால் பண்ணை அமைந்துள்ள பகுதியில் தீவிரமாக கிராம மக்கள் மற்றும் போலீசார் தேடியபோது கடல் பாசி சேகரிக்க கொண்டுசென்ற கண்ணாடி, சாப்பாட்டு பாத்திரம் உள்ளிட்டவற்றை  முதலில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடலில் துணி இல்லாமல் அரைகுறையாக எரிந்த நிலையில் சந்திரா கிடந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

பின்னர் ஆத்திரமடைந்த சந்திராவின்  உறவினர் மற்றும் மீனவ கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன்  அதில் பணியாற்றிய ஆறு வடமாநிலத்தவர்கள் தான் சந்திராவை கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு  சரமாரியாக அவர்களை தாக்கி அவர்கள் பயன்படுத்தி வந்த இரண்டு இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளனர்.


அரைநிர்வாணமாக எரிந்துகிடந்த ராமேஸ்வர மீனவப்பெண்! வட மாநிலத்தவர்களிடம் விசாரணை!

பின்னர் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

மேலும் உயிரிழந்த சந்திராவிற்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளதோடு அதில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் மேலும் ஒரு பெண் திருமணமாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தீவிர விசாரணைக்குப் பின்னர் தான் 6 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா என தெரியவரும் எனக்கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Embed widget