Crime: “நிரந்தர வேலை கிடைக்காதோ என்ற அச்சம்” - 3வது பெண் குழந்தையை கொன்ற தம்பதி.. ராஜஸ்தானில் கொடூரம்!
ராஜஸ்தானில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் நபர் தனது 5 மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் நபர் தனது 5 மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் 36 வயதான ஜவர்லால் மேக்வால். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இவரது மனைவி கர்ப்பமாகியுள்ளார். இவர்களுக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு 3வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது 3வது குழந்தையால் மாநில அரசின் இரண்டு குழந்தைகள் கொள்கையால் நிரந்தர வேலை கிடைக்குமா என்ற அச்சத்தில் மேக்வால் இருந்துள்ளார்.
இதனால், மேக்வால் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு விரும்பதகாத முடிவை எடுத்துள்ளார். அதன்படி, தங்களுக்கு சமீபத்தில் பிறந்த 5 மாத 3வது பெண் குழந்தையை கொல்ல திட்டமிட்டனர்.
Man working as contractual employee in Rajasthan govt throws his 5-month-old daughter in canal to avoid hurdles in securing permanent job: Police
— Press Trust of India (@PTI_News) January 23, 2023
இதையடுத்து, மேக்வால் தனது 5 மாத பெண் குழந்தையை கடந்த ஞாயிற்று கிழமை மாலை இந்திரா காந்தி கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார். இந்த குற்ற செயலுக்கு அவரது மனைவி முழு ஆதரவாக இருந்துள்ளார்.
இதுகுறித்து பிகானேர் எஸ்பி யோகேஷ் யாதவ் தெரிவிக்கையில், “36 வயதான ஜவர்லால் மேக்வால் தற்போது ஒப்பந்தப் பணியாளராக இருந்துள்ளார். நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ராஜஸ்தானில் குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி உள்ளது. எங்கே, கிடைக்க இருக்கும் அரசு வேலை போய்விடுமோ என்ற பயத்தில் கால்வாயில் வீசி கொலை செய்தனர். மகளை கொலை செய்த தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.நிரந்தர அரசுப் பணியைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர், உடந்தையாக இருந்த மனைவியும் சேர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்" என்று தெரிவித்தார்.