மயிலாடுதுறையில் ரயில்வே போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் - 3 வாலிபர்கள் கைது
மயிலாடுதுறையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வேபாதுகாப்புபடை போலீசாரை தாக்கி, வாக்கிடாக்கியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயில்வே பாதுகாப்புபடை தலைமை காவலர் 47 வயதான பக்கிரிசாமி. இவர் இரவு பணியில் இருந்தபோது ஒன்றாவது பிளாட்பாரத்தில் சிலர் நின்றுகொண்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்துள்ளனர். உடன் தலைமைக்காவலர் பக்கிரிசாமி சம்பவ இடத்திற்கு சென்று இங்கு சத்தம் போடாதீர் பிளாட்பாரத்தை விட்டு வெளியில் செல்லுங்கள் என்று கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர்கள் திடீரென்று பக்கிரிசாமியின் வாக்கிடாக்கியை பிடிங்கி உடைத்ததோடு அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து பக்கிரிசாமி மயிலாடுதுறை ரயில்வே இரும்புபாதை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரயில்வே இரும்புபாதை காவல்நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் முத்துக்குமரசாமி, பதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து ரயில்வே பாதுகாப்புபடை போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர்களை சிசிடிவி கேமராபதிவுகளை கொண்டு அடையாளம் கண்டனர். அதில் மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெரு கங்கை நகரை சேர்ந்த 21 வயதான விஜய், 20 வயதான அஜித்குமார், கிட்டப்பாத்தெருவை சேர்ந்த 22 வயதான என்.விஜய் ஆகிய 3 பேர் என தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்றுபேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற நபர் தவறி விழுந்து உயிரிழப்பு. மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக தேடி உடலை கைபற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நத்தம் கிராமத்தில் மேலத் தெருவில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற சந்திரசேகர் என்ற 45 வயது நபர் தவறி குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்தார். அதனை தொடர்ந்து அவரின் உடலை காணவில்லை என கிராம மக்கள் மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவரை தேடி வந்தனர்.
ஆனால், உடல் கிடைக்காத காரணத்தால் படகு வரவழைக்கப்பட்டு படகு மூலம் தேடுதலில் ஈடுபட்டனர். சந்திரசேகர் தனியார்கேஸ் நிறுவனத்தில் லோடு மேன்னாக வேலை செய்தார். அவருக்கு மனைவி மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மகனும் தனியார் கல்லூரியில் படிக்கும் மகளும் உள்ளனர். தீபாவளி விடுமுறை என்பதால் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளம் மிகவும் ஆழமாக இருந்ததால் அவர் தவறி குளத்தில் விழுந்து தண்ணீரில் முழ்கி இறந்து விட்ட நிலையில் அவரை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேடி அவரது உடல் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அரசு விதிமுறைகளை மீறி மிக ஆழமான முறையில் மணல் எடுத்ததால் இந்த விபரீதம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டை தெரிவித்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் மணல் எடுக்கும் போதே அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என அப்பகுதி மக்கள் கூறினர்.