பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் 13 லட்சம் மோசடி - நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
’’இங்கிலாந்தில் இருந்து பரிசுப்பொருள் வருவதாகவும் அதனை பெற பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் மோசடி செய்தனர்’’
பரிசு பொருள் அனுப்புவதாக பெண்ணிடம் 13 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெயந்தி (42). இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த எரிக் வால்க்கர் பழக்கமானார். அவர் தன்னை டாக்டர் என அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு நண்பர்களாக பழகி வந்தனர்.
Vellur Ibrahim Speech: ருத்ரதாண்டவத்தை கிறிஸ்துவர்கள் கொண்டாடுவாங்க- வேலூர் இப்ராஹிம்
இந்த நிலையில் ஜெயந்தியின் மகள் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த பரிசுபொருள் அனுப்புவதாக ஜெயந்தியிடம், எரிக் வால்க்கர் கூறினார். மேலும் அந்த பரிசு பொருளை செல்போனில் படம் பிடித்து ஜெயந்திக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி ஜெயந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறு முனையில் பேசிய பெண், தான் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து பரிசு வந்துள்ளது. அதை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
kanchipuram: கிராமத்திற்கு திடீரென விரைந்த மருத்துவர்கள்..நடந்தது என்ன?
இதனை உண்மை என்று நம்பிய ஜெயந்தி தனது வங்கி கணக்கில் இருந்து 13 லட்சத்து 65 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த பரிசுப்பொருளும் வந்து சேரவில்லை. அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டெல்லியில் வசித்து வரும் நைஜீரியாவை சேர்ந்த உச்சென்னா பேவர் பேட்ரிக் (47), ஆனகா அந்தோணி (37) ஆகியோர் பரிசு பொருள் அனுப்புவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து புதுவை சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் தனிப்படை போலீசார் டெல்லி சென்று உச்சென்னா பேவர் பேட்ரிக், ஆனகா அந்தோணி ஆகியோரை கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மோசடியில் ஈடுபட்ட இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
SA Chandrasekar Speech: எனக்கும் விஜய்க்கும் சண்டை தான்..மீண்டும் சொன்ன SAC