(Source: ECI/ABP News/ABP Majha)
பாரில் ரகளை: சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!
புதுச்சேரி மதுபானக்கடையை சூறையாடிய வழக்கில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மதுபானக்கடையை சூறையாடிய வழக்கில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் பேக்டரி எனும் யூடியூப் சேனல் மூலம் குக்கிங் வீடியோ உலகளவில் பிரபலம். இதை முறையாக கொண்டு சென்றவர் அவரது 33 வயதாகும் மகன் கோபிநாத். இந்த சேனலை 4.62 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த டாடி ஆறுமுகம் மதுரை, புதுவையில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் டாடி ஆறுமுகம் பிரியாணி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது மகன் கோபிநாத் தனது நண்பர்கள் 4 பேருடன் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி இரவு முத்தியால் பேட்டை ஏ.கே.டார்வின் ஹோட்டலில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அந்த ஹோட்டலில் உள்ள PUB-ல் மது அருந்த வந்ததாக கூறப்படுகின்றது . அவர்கள் வந்ததில் இருந்து ஊழியர்களை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு 11 மணி ஆகிய பின்பும் அவர்கள் மது கேட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர் 11 மணிக்கு மேல் மது தர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கோபிநாத் அந்த ஊழியர் ஜார்ஜஸ் சினாஸை கடுமையான வார்த்தைகளால் திட்டி, எனக்கே தர மாட்டாயா என கேட்டு பீர் பாட்டிலை உடைத்துள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் உள்ள பொருட்களை சூறையாடி மூவரும் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ரகளை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் கோபிநாத் உள்ளிட்ட 5 பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜெயராம், தாமு கைது செய்யப்பட்டனர்.
தலைமைறைவாக உள்ள கோபிநாத் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி பிரீத்தி விசாரித்தார். அவர் கோபிநாத் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சிறையில் உள்ள ஜெயராம், தாமுவின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்