மேலும் அறிய

”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..

வங்கிக் கணக்குகளை உபயோகித்த ரோஹித் பரிடே (26) என்ற நபரை விசாரித்ததில் அவருடைய வங்கி கணக்குக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட பணம் வந்து சென்றது தெரிய வந்தது.

புதுச்சேரி  : ஆன்லைனில் அதிக வருவாய் கிடைக்கும் எனக் கூறி புதுச்சேரியில் ரூ.39.25 லட்சம் மோசடி செய்தவரை ஹைதராபாத்தில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அவரது வங்கி கணக்கில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.13 கோடி வரை மோசடி செய்யப்பட்ட பணம் கையாளப்பட்டது தெரியவந்துள்ளது.

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் கோபி எனபவர் ஆன்லைன் டிரேடிங்கில் அதிக வருமானம் கிடைக்கும் என இணைய வழி மோசடிக்காரர்கள் ஆசை வார்த்தை கூறியதைக் கேட்டு 39 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களிடமிருந்து எந்த வருமானமும் இல்லை என்பதால் சைபர் க்ரைமில் புகார் செய்தார். அது சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டதில் 18 வங்கிக் கணக்குகளுக்கு கோபி பணம் அனுப்பி இருப்பது தெரியவந்தது.

அதில் பிஹார், டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளில் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்கள் விலாசம் தெரிந்ததால் முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதில் தலைமை காவலர் மணிமொழி, காவலர் அருண் வினோத் அடங்கிய தனிப்படை போலீஸார் நேற்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றனர்.

அங்கு இந்த வங்கிக் கணக்குகளை உபயோகித்த ரோஹித் பரிடே (26) என்ற நபரை விசாரித்ததில் அவருடைய வங்கி கணக்குக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட பணம் வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இன்னும் பல்வேறு வங்கி கணக்குகள் தொடர்பு இருப்பதால் அது சம்பந்தமாக கொல்கத்தா, டெல்லி, பிஹார் ஆகிய இடங்களுக்கு செல்லவும் சைபர் க்ரைம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சைபர்கிரைம் விழிப்புணர்வு 

  1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit Card/Debit Card Details/OTP/CVV/Expiry Date எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.
  2. Online மூலம் Part Time Job என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  3. Fake Loan App இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். உங்கள் கைபேசி Hack செய்யப்பட்டு விடும் ஜாக்கிரதை,
  4. Naptol, Meesho பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால் கூப்பன்களை பார்த்து ஏமாறாதீர்கள்.
  5. OLX போன்ற இணையதளத்தை பயன்படுத்தி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் விற்பதற்காக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
  6. Telegram, Facebook, Instagram போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம்.
  7. Army Vehicles Purchase 6163 அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் இது முற்றிலும் Fake ஆனது.
  8. Unknown Link, Message, Call, Video Call, Sexy Video Call எவ்வித பதிலும் அளிக்காமல் விட்டுவிடுங்கள்.
  9. Any Desk Quick Support CL Remote Access Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
  10. Fake Investment App பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்ய தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்தக்கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.
  11. அறிமுகம் இல்லாத நபர் Whatsapp or Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர். இது முற்றிலும் மோசடியானது.
  12. இலவச WiFi வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை தவிர்த்துவிடுங்கள்.
  13. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC Biometric System Update என கூறுவதை நம்பி ஏமாறவேண்டாம்.
  14. Helicopter Ticket Booking Q வேண்டாம்.
  15. Postal Payment Bank KYC Update வேண்டாம்.
  16. Credit Card Bonus Point Redeem செய்துதருவதாக கூறி போன் வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.
  17. True Caller App Gpay, Phone pe பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இது உங்கள் போனை Hack செய்துவிடும்.
  18. தேவையற்ற App-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். UnUsed App களை உடனடியாக செய்து விடுங்கள்.
  19. உங்களது மொபைலில் Date of Birth, Cell Phone Number போன்ற Easily Access பண்ண கூடிய Password-ஆக வைக்க வேண்டாம்.
  20. உங்களது Cellphone ல் Profile DP-இல் உங்கள் Photo வைக்க வேண்டாம். உங்கள் Photo morphing செய்து பணம் பறிக்கக்கூடும்.
  21. Instagram IMO போன்ற சமூக வளைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பறிமாற்றம் செய்ய கூடாது. Facebook, Whatsapp போன்ற சமூகவளைதளங்கள் மூலம் உங்களிடம் தெரிந்த நபர்களின் அக்கவுண்ட் எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு,  தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு, தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Top 10 News Headlines: அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு,  தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு, தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Top 10 News Headlines: அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Car Fuel City Traffic: சிட்டி ட்ராபிக்கிற்கு எது கரெக்டா இருக்கும்? பெட்ரோலா? டீசலா? EV Vs சிஎன்ஜி - செலவு குறையுமா?
Car Fuel City Traffic: சிட்டி ட்ராபிக்கிற்கு எது கரெக்டா இருக்கும்? பெட்ரோலா? டீசலா? EV Vs சிஎன்ஜி - செலவு குறையுமா?
Tamilnadu Roundup 10.07.2025: இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
Embed widget