மேலும் அறிய

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

பெண்களை ஆபாசமாக பேசியது, தொழில்நுட்பத்தை தவறாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் பப்ஜி மதன் மீது வழக்கு பதிவு!

யூடியுப்பில் ஆபாசமாக தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு பப்ஜி விளையாடி வந்த மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சைபர் பிரிவு காவல்துறை மதனை நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆக அழைப்பு விடுத்திருந்தனர், ஆனால் அவர் நேரில் வந்து ஆஜர் ஆகாத நிலையில் வழக்கை பதிவு செய்துள்ளது காவல்துறை. ஏற்கனவே மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களை முடக்க போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு ?

ஏற்கனவே பப்ஜி என்னும் விளையாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக பப்ஜி விளையாடியது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, பொது இடங்களில் பெண்களை அவமதித்து பேசியது (509), ஆபாசமாக பேசியது (209 B) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கே மதன் - தேடுதல் வேட்டையை தொடங்கிய காவல்துறை

காவல்துறையின் பிடி நெருங்கி வரும் நிலையில், மதன் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சைபர் பிரிவு மூலம் அவரின் IP address ட்ரெஸ் செய்து அவரை பிடிக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

மதனின் பின்னணி

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், சட்ட விரோதமாக பப்ஜி விளையாட்டை விளையாடி யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர் தான் மதன். விளையாட்டை விளையாடியதோடு நிறுத்தாமல், ஆபாசம் நிறைந்த பேச்சுகளை பெண்களிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது தான் மதனின் ஸ்டைல். பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலர் மதனின் தீவிர யூடியுப் ஃபாலோவராகவும் இருக்கின்றனர்.

இப்படியாக சுமார் 8 லட்சம் பேர் மதனின் யூடியுப் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இதில் பெரும்பாலும் இருப்பவர்கள் 18 வயதிற்கும் குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்தவர்கள். இவருடைய யூடியுப் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைத்து வைத்துள்ள மதன், யூடியுப் பக்கத்தில் ஆபாசமாக விளையாடுவது மட்டுமின்றி, சில சிறுமிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வருமாறு அழைப்பதும், அங்கே அந்தரங்க பேச்சுகளில் ஈடுபடுவதும் உண்டு.

சட்டவிரோமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி கண்முடித்தனமாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், சிறுமிகள் பலரும் யூட்யூப் நேரலையில் ஆபாசமாக பேசும் அவலமும் இங்கே நடைபெற்று கொண்டு இருக்கிறது. பலரிடமிருந்து நிதியுதவி பெரும் மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளார். அதன் மூலம் பலருக்கு தான் உதவுவதாகவும் பில்ட் அப் கொடுத்துள்ளார். இப்படி எல்லைகள் மீறியுள்ள மதனின் காணொளிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் நிறைந்துள்ள நிலையில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையிடமும் - மாநில குழந்தைகள் நல ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில் இணைய வழியில் பல தவறுங்களை செய்துவரும் மதனின் யூடியுப் சேனலை முடக்க யூடியுப் நிறுவனத்திற்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் அவரை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்ட நிலையில் தற்போது மதன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மதனின் யூடியுப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் விரைவில் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Embed widget