விழுப்புரத்தில் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; பேருந்தின் அடியில் சிக்கி நொறுங்கிய கொடுமை..
விழுப்புரத்தில் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் ஒன்று புறப்பட்டது. இந்த கார் இரவு 7.30 மணியளவில் விழுப்புரம் திருநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காருக்கு பின்னால் கார் ஒன்றும் சென்றது. அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கரை முந்திச்செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார், பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. விபத்து நடந்ததும் தனியார் பேருந்து டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் விக்டோரியா நகரை சேர்ந்த மார்ட்டின் மகன் ஆனந்த்ஜோகன் (வயது 23), அவரது சகோதரி கேத்தரின் பிலோரியா (21) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Alanganallur Jallikattu : விடாமல் போராடிய இளைஞர்.. தூக்கியெறிந்த காளை
ஆனால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கார் டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(43) என்பவரை மட்டும் எளிதில் மீட்க முடியவில்லை. வலியால் அவர் அலறி துடித்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
VK Sasikala on MGR Birth Anniversary : “மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்”- சசிகலா உறுதி
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மோகன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்