மாமல்லபுரம் சிவன் சிலை திருட்டு: பூசாரி கைது! 100 கிலோ சிவலிங்கத்தை திருடிய அதிர்ச்சி சம்பவம்! #மாமல்லபுரம் #சிவன்_சிலை #திருட்டு
"மாமல்லபுரத்தில் சிவன் சிலையை திருடிக் கொண்டு பூசாரியை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்"

தெலுங்கானாவில் இருந்து சிவலிங்க கற்சிலை வாங்க மாமல்லபுரம் வந்த சிவன் கோயில் பூசாரி. இரவு நேரத்தில் 100 கிலோ எடையுள்ள சிவலிங்கத்தை திருடி மோட்டார் சைக்களில் கடத்தி சென்ற போது, வாகன சோதனையில் பிடிபட்டார்.
சிவலங்கத்தை திருடி சென்ற பூசாரி
தெலுங்கானாவில் இருந்து சிவலிங்க கற்சிலை வாங்க வந்த சிவன் கோயில் பூசாரி ஒருவர் சிற்பக்கலை கூடங்களில் சிலை வாங்குவது போலபேரம் பேசிய அவர், இரவு நேரத்தில் 100 கிலோ எடையுள்ள சிவலிங்கத்தை திருடி மோட்டார் சைக்களில் கடத்தி சென்ற போது போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள சிவிலிங்க சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த விக்ரபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது29), இவர், அப்பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயிலில் தலைமை பூசாரியாக உள்ளார். இந்நிலையில் சிவன் கோயிலில் வெளிப்புற வளாகத்தில் புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்காக கோயில் நிர்வாகத்தினர் புதிய சிவலிங்க கற்சிலையை வாங்கி வர அவரை மாமல்லபுரம் அனுப்பி உள்ளனர்.
பூசாரி கார்த்திக் வடகடம்பாடி அம்பாள் நகரில் ஒரு கற்சிற்பக்கூடத்தில் 2 அடி உயர சிவலிங்க சிலையை பார்த்து தாங்கள் இதனை வாங்கி செல்வதாகவும், ஊருக்கு சென்றவுடன் உங்களுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும், சிலையை நீங்கள் பார்சலில் அனுப்பிவிடுங்கள் என அங்குள்ள சிற்பி ஒருவரிடம் பாவலா செய்து நாடகமாடிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
இருசக்கர வாகனத்தில் திருட முயற்சி
பிறகு அருகில் உள்ள பூஞ்சேரி பகுதிக்கு சென்ற கார்த்திக் அங்கு பாரிவள்ளல் (வயது43) என்பவருடைய கற்சிற்ப கூட்டத்தின் வெளியே சாலை ஓரத்தில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்தை பார்த்த அவர் பணம் கொடுத்து வாங்கி செல்லாமல் இதனை இரவில் திருடி ஒசியில் கடத்த திட்டம் போட்டார். பிறகு இரவில் சிவலிங்க சிலையை திருடி கோணிப்பையில் சுற்றி, மாமல்லபுரத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு ஆக்டிவா மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார்.
பூசாரியை கைது செய்த போலீஸ்
அப்போது பூஞ்சேரி சோதனை சாவடி மையத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி ஆகியோர் வாகன தணிக்கை செய்தமாமல்லபுரம் போது போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றுள்ளார். பிறகு போலீசார் சிவலிங்கம் கடத்தப்படுவதை கண்டுபிடித்து, அவரை மடக்கிபிடித்து கைது செய்து மாமல்லபுரம் காவல் நிவையத்தில் வைத்து விசாரித்த போது, பணம் கொடுத்து வாங்காமல் ஓசியில் சிலையை கடத்தி சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
பிறகு அவரிடம் இருந்து கடத்தப்பட்ட 100 கிலோ எடையுள்ள, 2 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு தெலுங்கானா சிவன் கோயில் பூசாரி கார்த்திக் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.





















