மேலும் அறிய

சமாதானம் செய்ய வந்தவர் மீது தாக்குதல்... கடுப்பாகி நாட்டு குண்டு வீசினார்!

புதுவையில் முன்விரோத தகராறில் பிளம்பரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசிய 3 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுவையில் முன்விரோத தகராறில் பிளம்பரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசிய 3 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60) கொத்தனார். இவரது மனைவி ருக்மணி. இவர்களது மகன்கள் மகேஷ் (29), மகேந்திரன் (26) பிளம்பராக உள்ளார்.  இவர்களது உறவினர் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மற்றொருவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது உறவினருக்கு ஆதரவாக மகேந்திரன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியை சேர்ந்த சிவா (60) என்பவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.  அப்போது மகேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் சிவாவை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அங்கு வைத்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் சிவா, அவரது மகன் பாவாடைராயன் தரப்பினர்  ஆத்திரத்தில் இருந்து வந்ததால் முன்விரோதம் தொடர்ந்தது.


சமாதானம் செய்ய வந்தவர் மீது தாக்குதல்... கடுப்பாகி நாட்டு குண்டு வீசினார்!

இந்தநிலையில் இன் று இரவு 8 மணியளவில் ருக்மணி, மகேஷ் ஆகியோர் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மகேசிடம், மகேந்திரனை எங்கே என்று கேட்டுள்ளனர்.  அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் தாக்கப்பட்டார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை மகேசின் வீட்டின் முன் வீசினர். இதில் அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனை பார்த்ததும் மகேஷ் வீட்டுக்குள் ஓடினார். குண்டுகளை வீசிய ஆசாமிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சிதறி கிடந்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.


சமாதானம் செய்ய வந்தவர் மீது தாக்குதல்... கடுப்பாகி நாட்டு குண்டு வீசினார்!

தொடர்ந்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பிளம்பரான மகேந்திரனின் வீட்டில் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் வெடி குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முன்விரோத தகராறில் மிரட்டுவதற்காக வீடு மீது வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Embed widget