தொடரும் பெரியகுளம் அதிர்ச்சி... மேலும் 500 ஏக்கர் அரசு நிலம் அபகரித்தது கண்டுபிடிப்பு!
ஏற்கனவே 100 ஏக்கருக்கு மேலாக அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது 500 ஏக்கர் நிலம் தனியார் வசம் கையகப்படுத்தியது தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியுள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறபட்ட ஆவணங்களில் முறை கேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு. தனியார் வசம் உள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலத்தில் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை மணு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிக்கு மேல் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கடந்த 2000 ஆண்டிற்கு முன்பு வரை உள்ள அரசு ஆவணங்களில் அரசு தரிசு நிலங்களாக பதிவேட்டி உள்ளது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலங்கள் அனைத்தும் JC என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயர்களுக்கு பட்டா வழங்கி உள்ளதாக தற்பொழுது கணிணி மயமாக்கப்பட்ட பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வளர்கள் அரசப்பன் மற்றும் கண்ணன், பாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு ஆவணங்களை பெற்று ஆய்வு செய்த போது, மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள நிலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் 2000 ஆண்டிற்கு முன்புவரை உள்ள அரசின் A மற்றும் B பதிவேடுகளில் அரசு நிலங்கள் என குறிபிட்டுள்ள நிலையில் தற்பொழுது கணிணி மயமாக்கப்பட்ட பின்பு அரசு ஆவணங்களில் அரசு நிலத்தை பட்டா வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தினர் பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்பிடம் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெறபட்ட ஆவணங்களை கொண்டு அரசு நிலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும் அரசு நிலத்தை பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேனி மாவட்டத்தில் இது போன்று 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பட்டா பெற்றவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்னபிரகாஸ் என்பவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின் உள்ள சுமார் 100 ஏக்கருக்கும் மேலான அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக வருவாய் துறை அலுவலர்கள் உதவியுடன் பட்டா போட்டதில் 4 தாசில்தார்கள் உட்பட 6 பேர் வருவாய் துறை சேர்ந்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேலும் பெரியகுளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்கள் தனி நபர்களுக்கு பட்டா வழங்கி உள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,