மேலும் அறிய

விரட்டி விரட்டி மகளை காதலித்த காதலன்... புரட்டி புரட்டி வெட்டிய பெற்றோர்!

கௌசல்யாவின் பெற்றோர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முகம்மது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் 23 வயது.  இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் கௌசல்யாவை காதலித்து வந்துள்ளார். இதற்கு கௌசல்யாவின் பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். தனது மகளை காதலிக்க கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.  அதனையும் மீறி முகம்மது பெமினாஸ் கௌசல்யாவிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று கௌசல்யாவின் தந்தை விஜயகுமார் மற்றும் தாய் தீபா இருவரும் இருசக்கர வாகனத்தில் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். அங்கு முகம்மது பெமினாஸ் மற்றும் அவரது பெற்றோர்களிடம் எங்களுடைய பெண்ணிடம் உங்கள் மகன் பழக வேண்டாம், நாங்கள் எங்கள் பெண்ணிற்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்ய உள்ளோம் என கூறியுள்ளனர். அதனை ஏற்காமல் கௌசல்யாவை தான் திருமணம் செய்வேன் என முகம்மது பெமினாஸ் கூறியுள்ளார்..

விரட்டி விரட்டி மகளை காதலித்த காதலன்... புரட்டி புரட்டி வெட்டிய பெற்றோர்!
இன்னிலையில் கோபமடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முகம்மது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த முகம்மது பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முகம்மது பெமினாஸின் உறவினர்கள் அடியக்கமங்கலத்தில் கௌசல்யாவின் தந்தை விஜயகுமார் வைத்துள்ள மருந்தகத்தை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

விரட்டி விரட்டி மகளை காதலித்த காதலன்... புரட்டி புரட்டி வெட்டிய பெற்றோர்!
மேலும் கௌசல்யாவின் தந்தை விஜயகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அடியக்கமங்கலம் பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் கௌசல்யாவின் தாயார் தீபாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக கௌசல்யாவின் பெற்றோரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முகம்மது பெமினாஸ் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முகம்மது பெமினாஸிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். தனது மகளை காதலித்த நபரை பெற்றோர்களை வீடு தேடி சென்று வெட்டிய சம்பவம் அடியக்கமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget