மேலும் அறிய

Pondur Mohan : ரவுடிகளை ஒழிப்பதுதான் டார்கெட்.. படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியை, தட்டித்தூக்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை

தற்போது கைது செய்யப்பட்டுள்ள போந்தூர் மோகன் , படைப்பை குணாவை காவல்துறையினர் தேடி வந்த பொழுது தப்பிப்பதற்கு பலமுறை உதவி செய்துள்ளார்

சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், ரவுடியிசம் கொடி கட்டி பறந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த  கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

Pondur Mohan : ரவுடிகளை ஒழிப்பதுதான் டார்கெட்.. படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியை, தட்டித்தூக்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை

வெள்ளத்துரையின் நியமனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கிக் கொண்டிருந்த ரவுடிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. நினைத்ததைப் போலவே, அவரும் களத்தில் இறங்கி ரவுடிகளை விரட்டத் தொடங்கினர். படப்பை குணா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கு வலை வீசப்பட்ட நிலையில் குணா உள்ளிட்ட பலரும் அதில் பிடிபட்டனர். 

Pondur Mohan : ரவுடிகளை ஒழிப்பதுதான் டார்கெட்.. படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியை, தட்டித்தூக்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை

படப்பை குணாவை பிடிக்க பல்வேறு யூகங்கள் வகுக்கப்பட்டது. படப்பை குணா மீது எட்டு கொலை வழக்குகள் மட்டும் 9 கொலை முயற்சி வழக்கு உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குணாவை ஸ்கெட்ச் போட்டு பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், பயந்து போன படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதால், படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியான போந்தூர் சிவா மற்றும் போந்தூர் சேட்டு ஆகிய இருவரை கைது செய்தனர். அதேபோல படப்பை குணாவின் ஆதரவாளராக இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தென்னரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக செங்கல்பட்டு , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் குறைவாகவே இருந்து வந்தது.

Pondur Mohan : ரவுடிகளை ஒழிப்பதுதான் டார்கெட்.. படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியை, தட்டித்தூக்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை
தனது முதன்மை டார்கெட் சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக விடாப்பிடியாக இருந்தார். போந்தூர் சிவா மற்றும் போன்ற சேட்டு ஆகிய இருவருக்கும் உறவினரான போந்தூர் மோகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த பொழுது, சாமர்த்தியமாக போந்தூர் மோகன் தப்பி வந்தார்.  போந்தூர் மோகன் அந்தப் பகுதியில் குட்டி ரவுடியாக வலம் வந்தது மட்டுமில்லாமல், கட்டப்பஞ்சாயத்து, நிறுவனங்களை மிரட்டுவது,  என பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல படப்பை குணா தப்பிப்பதற்கு உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Pondur Mohan : ரவுடிகளை ஒழிப்பதுதான் டார்கெட்.. படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியை, தட்டித்தூக்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை

அதேபோல படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தேவையான உதவிகளை வெளியிலிருந்து செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் போந்தூர் மோகனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில், வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர், சட்டவிரோதமான பல்வேறு ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, போந்தூர் மோகனை கைது செய்தனர். தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னதாக  குணாவிற்கு உதவி செய்ததாக பல, காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரணடைந்த குணாவின் மீது,  குண்டர் தடுப்பு சட்டம் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் கம்பி எண்ணி வருகிறார் படப்பை குணா.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget