மேலும் அறிய

மதுரையில் பரபரப்பு... ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுமதித்துள்ளனர்.

மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஆன்லைன் ரம்மியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.  ஆன்லைன் ரம்மியால் கல்லூரி படிப்பையே பாதியில் விட்டு வேலைக்கு சேர்ந்த இளைஞர் பண இழப்பால் உயிரிழந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்டம்  முள்ளாகாடு பகுதியை சேர்ந்த (மகாலட்சுமி - முத்துராமன்)  தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு தாய் மகாலட்சுமி உயிரிழந்த நிலையில் தந்தை முத்துராமன் வேறொரு திருமணம் செய்து தனியாக வசித்துவந்துள்ளார்.  இந்நிலையில் தம்பதியினரின் பிள்ளைகளான குணசீலன்(26), பசுபதி(25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசி என்பவரது பராமரிப்பில் வளர்ந்துவந்துள்ளனர். இந்நிலையில் குணசீலன் கல்லூரியில் பட்டபடிப்பு 3ஆவது ஆண்டு படித்துவந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கியுள்ளார்.  

மதுரையில் பரபரப்பு... ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை
 
இதனையடுத்து தம்பி பசுபதி அண்ணன் குணசீலனுக்கு  50 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க கொடுத்துவிட்டு மதுரை அண்ணாபேருந்து நிலையம் பகுதியில் உள்ள நியூ மாஸ் என்ற உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்துவந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த குணசீலன் கடைசி செமஸ்டர் முடிக்காமலயே ஓட்டலில் வேலை பார்க்க வந்து கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்துவந்துள்ளார். அப்போதும் அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து வந்துள்ளார். இதேபோன்று தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்துள்ளார்.

மதுரையில் பரபரப்பு... ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை
 
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகளவிற்கான பணத்தை இழந்துவிட்டதாக தனது சக பணியாளர்களிடம் தெரிவித்துவிட்டு மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் மதுரை மாநகர் தாசில்தார் 1வது தெரு சாத்தமங்கலம் பகுதியில் தங்கியிருந்த வீட்டில்  நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 
 
மதுரையில் பரபரப்பு... ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை
 
இதனையடுத்து தம்பி பசுபதி நேரில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதனையடுத்து அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget