Crime: பாம்பை விட்டு கடிக்க வைத்து மனைவி, குழந்தையை கொன்ற கொடூர கணவன் - ஒடிசாவில் பயங்கரம்! பகீர் காரணம்!
மனைவி, மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து கணவர் கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime: மனைவி, மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கணவன்
ஒடிசாவின் கன்ஜாராம் மாவட்டம் அத்திபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (25). இவரது மனைவி பன்சாந்தி பத்ரா. இவர்களுக்கு கடந்த 2020ஆம் அண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவர் கணேஷ் பத்ரா, திருமணம் ஆனதில் இருந்தே வரதட்சணை கேட்டு மனைவியை டார்சர் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. நாள்தோறும் வரதட்சணை கேட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவன் கணேஷின் கொடுமை தாங்காமல், வரதட்சணை கேட்டு தன் கணவன் கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து, கணேஷை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன் பிறகு, மூன்று மாதங்களாக கணவன் கணேஷ் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி கணேஷின் மனைவி பன்சாந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் நுரை தள்ளியப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து அவரது கணவன் கணேஷ் கதறி அழுந்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, தாய் மற்றும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பன்சாந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் நாகபாம்பு கடித்து விஷம் ஏறி இறந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
பணத்திற்காக கணவன் செய்த கொடூரம்
ஆனால், ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பேரும் பாம்பு கடித்து இறந்து இருப்பார்கள் என போலீசார் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசார் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களாகவே, கணேஷ் பல்வேறு பாம்பாட்டிகளை சந்தித்து விஷம் நிறைந்த நாகபாம்பு கேட்டிருக்கிறார். கோயிலுக்கு விட வேண்டும் என்று சொல்லி பாம்பை கேட்டிருக்கிறார்.
அதன்படி, அந்த பாம்பை வாங்கி வந்து அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் பாம்பை விட்டுள்ளார். அந்த பாம்பு மகளையும், மனைவியையும் கடித்துள்ளது. காலையில் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ஒடிசா அரசு விபத்து, பாம்பு கடி உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கு ரூ.4 லட்சம் தருகிறது. அதன்படி, நான்கு லட்சத்திற்காக கணேஷ் பத்ரா, மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளது.