மேலும் அறிய

Robbery: பூட்டி இருக்கும் வீடுகள்தான் டார்கெட்.. வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மது குடித்துவிட்டு திருடிச்சென்ற கும்பல் கைது..

அண்ணாநகர் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் நேபாளிகள், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை அடுத்து, அந்த வீடுகளில் கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதனை அடுத்து, தனிப்படை அமைத்து சோதனை நடத்தப்பட்டது. 

கொள்ளை நடைபெற்ற வீடு இருக்கும் பகுதியில் உள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கி இருக்கிறது. அப்போது, நீதிபதி வீட்டில் இருந்த சைக்கிள் ஒன்று கொள்ளை போனது கண்டறியப்பட்டது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அந்த சைக்கிள் நீதிபதிக்கு சொந்தமானது இல்லை என தெரிய வந்தது. 

இதனால், அந்த சைக்கிள் பயணமான சிசிடிவி காட்சிகளை தேடிச்சென்ற காவல் துறையினர், நேபாளியைச் சேர்ந்த பூபேந்தரின் வீட்டில் அந்த சைக்கிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பூபேந்தரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், லால், கணேசன், பட்ராய் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. இவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய காவல் துறையினர், பெங்களூருவில் இருவரையும், சென்னையில் ஒருவரையும் கைது செய்தனர். 

Robbery: பூட்டி இருக்கும் வீடுகள்தான் டார்கெட்.. வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மது குடித்துவிட்டு திருடிச்சென்ற கும்பல் கைது..

அவர்களை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அண்ணாநகர், செனாய் நகர் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் இந்த நபர்கள், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை அடுத்து, அந்த வீடுகளில் கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அதே பகுதியில் இருக்கும் வீடுகளில் இந்த நேபாளி கும்பல் சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி கொண்டாடி வந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நீதிபதியின் வீட்டில் தங்கி இருந்து, பொருமையாக கொள்ளை அடித்து செய்துள்ளனர். 2 லட்சம் ரூபாய் பணமும், 50% நகைகள், பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புகார் அளிக்கப்பட்ட ஐந்து நாட்களுள் கொள்ளையர்களை பிடித்ததற்காக காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், வேறு வீடுகளில் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது சோதனை செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அண்ணாநகர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget