மேலும் அறிய

Crime: அடுத்தடுத்த இரண்டு கொலைகள்..! 3வது கொலைக்கு முன் மாட்டிக்கொண்ட கும்பல்..! நெல்லையில் நடந்தது என்ன?

திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ். இவர் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் செங்கல் சூளையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  6 பேர் கும்பல் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் அதே நாளில் தூத்துக்குடி அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. மேலும் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் கார்த்திக் பாண்டியனின் புல்லட்டை எடுத்துச் சென்ற பாபு செல்வம் அதனை திருப்பி தராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாபு செல்வத்தை நேற்று முன் தினம் இரவு ரெட்டியார்பட்டி மலை அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து செய்துங்கநல்லூருக்கு வந்து ஐயப்பன் என்ற சுரேஷை வேலை முடிந்து வரும் வழியில் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமியை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் உள்ள ஒருவருக்கு ஐயப்பன் என்ற சுரேஷூடன் முன்விரோதம் இருந்த காரணத்தை பயன்படுத்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இந்த இரண்டு கொலைகளையும் செய்த 6 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கருப்பசாமி என்பவரை மூன்றாவதாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கருப்பசாமி தன்னை கொலை செய்ய 6 பேர் கொண்ட கும்பல் நெல்லையில் இருந்து வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கருப்பசாமியை கொலை செய்ய விடாமல் தடுத்ததோடு இரண்டு கொலைகளை செய்த ஆறு பேர் கொண்ட  கும்பலை கைது செய்ததாக தெரியவந்துள்ளது.  பிடிபட்ட  அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்துறையின் கைதுக்கு பின்னரே பாபு செல்வம் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது வெளியே தெரிய வந்துள்ளது. அதன்பின்னரே காவல்துறையினர் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்த கும்பல் மூன்றாவது கொலையை செய்ய திட்டமிட்டு செல்லும்போது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" 10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget