மேலும் அறிய

நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

குழந்தையின் காதில் கிடந்த கம்மல் மட்டும் மாயமாகி உள்ளதோடு குழந்தையின் கன்னம், கழுத்துப்பகுதியில் லேசான காயம் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது ஆற்றங்கரை பள்ளிவாசல். மிகவும் புகழ்பெற்ற இந்த ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து தங்கியிருந்து வழிபாடு நடத்தி செல்வர். இந்த சூழலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, தனது மனைவி நாகூர் மீரா, குழந்தைகள் முகமது சபிக் (7),  நஜிலா பாத்திமா (21/2) ஆகியோருடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு நேற்றுமுன் மதியம் வந்து தங்கி உள்ளனர்.


நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

தனது இரு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்த வந்த  நிலையில் இரவு நேரமாகியதால் தனது குழந்தைகளுடன் தர்காவில் உள்ள திண்ணையில் தூங்கி உள்ளனர். பின்னர் அதிகாலை தூங்கி எழுந்து பார்த்த போது தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை நஜிலா பாத்திமா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் தூக்கி கொண்டு நடந்து சென்று அருகே நிறுத்தி இருந்த காரில் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. இந்த  சூழலில் இது தொடர்பாக கூடங்குளம் காவல்துறையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று குழந்தை திருச்செந்தூரில் மீட்கப்பட்டது.


நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

குறிப்பாக திருச்செந்தூர்  பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த பெண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் மீட்கப்பட்ட குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில், அந்த குழந்தை ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து மர்ம நபரால் கடத்தப்பட்டு தேடப்பட்டு வந்த குழந்தை என்பதை என முடிவு செய்த காவல்துறையினர் அக்குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள்  தங்கள் குழந்தைதான் என உறுதி செய்தனர். குழந்தை கிடைத்ததை அறிந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து குழந்தையை தூக்கி கொஞ்சி ஆனந்த கண்ணீர் விட்டனர்.


நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

மேலும் குழந்தையின் காதில் கிடந்த கம்மல் மட்டும் மாயமாகி உள்ளதோடு குழந்தையின் கன்னம், கழுத்துப்பகுதியில் லேசான காயம் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை நகைக்காக கடத்தப்பட்டதா? அல்லது சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தன்னை நெருங்கிய அறிந்த மர்ம நபர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக குழந்தையை திருச்செந்தூரில் விட்டு சென்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget