மேலும் அறிய
Advertisement
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக அறியப்பட்ட மூதாட்டி.. உயிருடன் வந்த பரபரப்பு..
செங்கல்பட்டு பகுதியில் உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட பெண்மணி மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா. வயது 72. இவருடைய கணவர் சுப்பிரமணி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணி உயிரிழந்து விட்டார். சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார்.
வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. உடனடியாக சந்திரா காணாமல் போனதை குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழுந்துள்ளார். இது குறித்த நண்பர்கள் மூலமாக தெரியவந்துள்ளது. சந்திரா தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக, உறவினர்கள் கருதி உள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேல் உறுதி செய்ததை தொடர்ந்து, உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதனை அடுத்து சந்திரா உயிரிழந்தது குறித்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சந்திராவின் சந்திராவின் உடலுக்கு, அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட போட்டு மாலை இறுதி மரியாதை உடன் தாரை தப்பட்டை வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்தனர். மேலும் சந்திராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, பால் ஊற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்டபொழுது, உயிரிழந்ததாகவும் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தான் உறவினர்கள் மற்றும் சந்திராவிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்ததாக கருதி வணக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது காவல்துறையினரின் தற்போது முக்கிய விசாரணையாக இருந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion