மேலும் அறிய
Advertisement
ஒருபுறம் சமையல்... மறுபுறம் சீரியல்.. வீட்டில் நுழைந்து மொத்தமாக அள்ளிச் சென்ற முகமூடி கும்பல்!
காஞ்சிபுரத்தில், அரசு அதிகாரிகளின் வீட்டில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே மாருதி நகரை சேர்ந்தவர் மேகநாதன். சென்னை உள்ளாட்சி நிதித் துறை அலுவலகத்தில் துணை ஆய்வாளர். இவரது சகோதரர்கள் சீனிவாசன், மணிகண்டன் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இதில் சீனிவாசன், காஞ்சிபுரம் வணிகர் வீதியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மணிகண்டன் வேளாண் துறை கண்காணிப்பாளராக உள்ளார்.
நேற்று காலை சகோதரர்கள் 3 பேரும், வேலைக்கு சென்றனர். அவர்களது மனைவிகள் 3 பேரும் வீட்டில் இருந்தனர். மதியம் 2 மணியளவில், திடீரென மேகநாதன் வீட்டுக்குள் முகமூடி அணிந்து கொண்டு 4 பேர், கத்தியுடன் நுழைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள், அலறி கூச்சலிட்டனர். உடனே அவர்கள், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். சத்தம் போட்டால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி இதையடுத்து அவர்களும் வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களது கை கால்களை கட்டிப்போட்டும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட வீட்டில் இருந்த சுமார் 80 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 5லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த நான்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து காஞ்சி தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடைபெற்ற பொழுது, இருவர் சீரியல் பார்த்து கொண்டிருந்ததாகவும், ஒருவர் உணவு சமைத்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். கதவை மூடாமல் இருந்ததால் திருடர்கள் சுலபமாக வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு சந்தேகத்துக்கிடமான வகையில் இருவர் அந்த வீட்டின் அருகே நோட்டமிட்டது காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர் அந்த சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இருவரும் யார் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion