'நள்ளிரவில் வீட்டுக்குள் செருப்பை வீசியெறியும்' மர்ம பெண்: தொண்டியில் பொதுமக்கள் பீதி'
தொண்டியில் நள்ளிரவு நேரத்தில் வீடுகளுக்கு வெளியே கழட்டி விடப்பட்டிருக்கும் செருப்புகளை வீசி எறியும் மர்ம பெண்ணால் பரபரப்பும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளது
'நள்ளிரவில் வீட்டுக்குள் செருப்பை வீசியெறியும்' மர்ம பெண்: தொண்டியில் பொதுமக்கள் பீதி'
தொண்டியில் நள்ளிரவு நேரத்தில் வீடுகளுக்கு வெளியே கழட்டி விடப்பட்டிருக்கும் செருப்புகளை வீசி எறியும் மர்ம பெண்ணால் பரபரப்பும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளது;ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து வரும் மர்ம பெண் ஒருவர் வீடுகளுக்கு வெளியே கழற்றிவிடப்பட்டிருக்கும் செருப்புகளை அவர் கையில் கொண்டு வரும் பையில் அள்ளி அருகாமையில் வசிக்கக்கூடிய பொது பொது மக்களின் வீடுகளில் வீசி எறியும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது.தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில்.. தெருக்களில் மெதுவாக நடந்து வரும் அந்தப்பெண் அங்குள்ள வீடுகளில் நைஸாக கேட்டைத் திறந்து உள்ளே சென்று வீட்டுக்கு வெளியே கிடக்கும் செருப்புகளை அந்தப்பெண் கையில் வைத்திருக்கும் பையில் அள்ளுகிறார். பின்னர் எதிர்புறத்திலும் அருகாமையிலும் இருக்கக்கூடிய வீடுகளின் காம்பவுண்டுக்குள் ஒன்றொன்றாக வீசி எறிகிறார்.
பின்னர் சர்வசாதாரணமாக அவர் அங்கிருந்து நடந்து செல்கிறார் இந்த காட்சியை பார்க்கும் பொதுமக்கள் எந்த நோக்கத்தில் இந்த பெண் ஒரு வீட்டில் இருக்கும் செருப்புகளை அள்ளி மற்ற வீட்டிற்குள் வீசி எறிகிறார் என்ற விவரம் புரியாமல் பீதியடைந்து போயுள்ளனர்.வேறு ஏதும் மாந்திரீக வேலைகளாக இருக்குமா அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணா என தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர். எனவே காவல்துறையினர் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆதாரமாக கொண்டு உரிய விசாரணை செய்து, அந்த பெண் யாரென கண்டறிய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மர்ம பெண் தொடர்பான விஷயங்களை தொண்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் நாம் விசாரித்தபோது, "கடந்த இரு வாரங்களாக ஒரு வீட்டினருடைய செருப்புக்கள் மற்றொரு வீட்டு காம்பவுண்டு சுவர் தாண்டி எறியப்பட்டு கிடப்பதை தொடர்ந்து கண்டோம்" 'இது யார் செய்யும் வேலை என தெரியவில்லை, இரவு நேரம் பூட்டி கிடக்கும் வீட்டு முன் பக்க கதவுகள் திறந்து கிடப்பதையும் எங்களால் பார்க்க முடிந்தது', "எனவே இது யாரோ மர்ம நபர்கள் செய்யும் வேலையாகத்தான் இருக்கும் என புரிந்து கொண்டோம், ஒரு சிலர் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கூட இரவு நேரங்களில் இதுபோன்ற செருப்புகளை வாயில் கவ்விக் கொண்டு வந்து தன் எஜமானர் வீட்டுக்குள் போடும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு'.
ஆனால் எங்கள் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், அந்தப் பகுதிகளின் சில வீடுகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது, பெண் ஒருவர் நல்ல நாகரீகமான முறையில் ஆடை அணிந்து தெருக்களில் வரும் அவர், ஒரு வீட்டில் கிடக்கும் செருப்புகளை தான் கையில் கொண்டுவரும் பைகயில் சேகரித்து எதிர்ப்புறம் மற்றும் அருகில் இருக்கக்கூடிய வீடுகளுக்குள் வீசி எறிவதை நாங்கள் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்'. 'எதற்காக இந்த பெண் இந்த காரியத்தை செய்கிறார் என்று தெரியாமல் குழம்பி போய் வீதி அடைந்துள்ளோம்' சிறுகுழந்தைகள் அதிகம் உள்ள எங்கள் வீடுகளில் மாந்திரீக வேலைகளில் ஏதேனும் செய்து வைக்கப்படுகிறதா என்ற மிகவும் கவலை அடைந்து உள்ளோம், 'எனவே காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.