மேலும் அறிய

திருவள்ளூர்: சைடிஸ் பிரச்னையில் நடந்த கொலை! சரணடைய வந்த வாலிபரை கடத்திக்கொன்ற கும்பல்!

செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கோகுல் சரணடைய வருவதை அறிந்து, அவரை கடத்தி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் போலீசில் சரணடைய வந்த வாலிபர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வெல்டர் தொழில் செய்து வரும் வேலு என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களான செல்வா, கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேருடன் சென்று செவ்வாப்பேட்டையை அடுத்த சிறுகடல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது சைடிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த செல்வா தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து, வயிறு, கை, கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் வேலுவின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. 

இதனிடையே  செவ்வாப்பேட்டை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே அவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள் தான் வெல்டர் வேலுவை கத்தியால் வெட்டி கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடையில் வேலு கொலை செய்யப்பட்ட வழக்கில் கோகுல் காவல் நிலையத்தில் சரணடைய சென்றார். ஆனால் இதுபற்றி அறிந்த வேலுவின் நண்பர்கள் சிலர், அவரை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் கடத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கோகுலை தேடி வந்தனர். இந்நிலையில் தொட்டிகலை பொன்னி அம்மன் கோயில் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நிலம் ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியபோது கொலை செய்யப்பட்டது கோகுல் என தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் வேலு கொலைக்கு பழிக்குப் பழியாக அவரது நண்பர்களான அயத்தூரைச் சேர்ந்த அஜித், வேப்பம்பட்டு சதீஷ் மற்றும் 17 வயதுக்கொண்ட  2 சிறுவர்கள் ஆகிய 4 பேரும் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கோகுல் சரணடைய வருவதை அறிந்து, அவரை கடத்தி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget