மேலும் அறிய

Crime: ஆபாச வீடியோ பார்ப்பதை தடுத்த மனைவி.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற கணவன்..!

ஆபாச வீடியோ பார்த்த கணவரை மனைவி பார்க்காதே என்று தடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மது போதையைவிட மிகவும் ஆபத்தான போதை ஆபாச போதை. அது எந்த அளவிற்கு ஆபத்து என்றும், என்னவெல்லாம் செய்யும் என்றும் சமீபகாலத்தில் நிறைய பார்த்து கடந்து வந்துவிட்டோம். அந்த வகையில். ஆபாச வீடியோ பார்த்த கணவரை மனைவி பார்க்காதே என்று தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மும்பையை சேர்ந்த 25 வயதான காஜல் என்பவருக்கும், 35 வயதாக கிஷோர் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் கதிர்காமத்தில் உள்ள துருவ்தாரக் சொசைட்டியில் வசித்து வரும் நிலையில், வாராச்சாவில் உள்ள ஒரு வைர தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளது. திருமணம் ஆனது முதலே இவர்கள் இருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்தநிலையில், கிஷோர் தனது மனைவியுடன் ஆபாச வீடியோக்களை காட்டி மீண்டும் மீண்டும் உறவில் ஈடுபட முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அது காஜலுக்கு பிடிக்காமல் போயுள்ளது. இதையடுத்து, காஜல் தனது கணவரிடம் இதுபோன வீடியோக்களை பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார். 

இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத கிஷோர் தொடர்ந்து இதுபோன்றே செய்து வந்துள்ளார். ஆபாச படம் பார்ப்பது தொடர்பாக இருவருக்கு இடையே தொடர்ந்து தகராறு பெரிதாகி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 20 ம்தேதி இருவருக்கும் இடையே இந்த விஷயம் தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் கிஷோர் குளியலறையில் இருந்த மனைவி காஜல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பிறகு, தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை  உணர்ந்து தனது மனைவியை காப்பாற்ரி அருகிலிருந்த ஸ்மியர் மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காஜல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மரண வாக்குமூலம்:

பலத்த தீக்காயம் அடைந்த காஜலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​தனது மனைவி தீக்குளித்துக்கொண்டதாக கிஷோர் மருத்துவமனையில் தெரிவித்துள்ளார். இருந்தும் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த சௌக் பஜார் போலீசார் காஜலின் வாக்குமூலத்தை எடுத்தபோது முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வாக்குமூலத்தில், “ஆபாச வீடியோக்கள் மற்றும் பிற காரணங்களால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் என்னை பிடிக்கவில்லை என்றும், இங்கிருந்து வெளியேறு ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன் என்றும் கூறினார். அதற்கு நான் செல்லமுடியாது என்று சொன்னதால் என்னை எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்” என்று தெரிவித்தார். இதையடுத்து, கிஷோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

காஜலுக்கு இது இரண்டாவது திருமணம்: 

காஜலுக்கு இது இரண்டாவது திருமணம். காஜலின் முதல் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன்பிறகு, மும்பையிலுள்ள தனது அண்ணன் வீட்டில் காஜல் வாழ்ந்து வந்துள்ளார். கிஷோர் சில காலத்திற்கு முன்பு மும்பையில் பணிபுரிந்தார். காஜலின் அண்ணனும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இப்படித்தான் காஜலும் கிஷோரும் ஒருவரையொருவர் சந்தித்தனர். பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget