Crime : மதுவை ஊற்றிக்கொடுத்து 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. கள்ளக்காதலன், தாய் மீது வழக்குப்பதிவு
இதை கேட்ட அவர்களது தாய், இதுபற்றி வெளியில் சொன்னால் நான் இறந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மது கொடுத்து இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் மற்றும் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான பெண். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் பிளஸ்-1 படிக்கும் மகளும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் அந்த பெண் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக புதுச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அப்போது புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போதெல்லாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. மேலும் மதுவை ஒயின் என்று கூறி, 2 சிறுமிகளுக்கும் அவர்கள் ஊற்றிக்கொடுத்துள்ளனர். இதற்கிடையில் அந்த பெண் சமையல் வேலைக்கு செல்லும் இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளர். இதை பயன்படுத்திய முகமது இஸ்மாயில் கடந்த 4 மாதமாக மது கொடுத்து அந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அந்த சிறுமிகள் தனது தாயிடம் கூறியுள்ளனர்.
இதை கேட்ட அவர்களது தாய், இதுபற்றி வெளியில் சொன்னால் நான் இறந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கடலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் முகமது இஸ்மாயில், சிறுமிகளின் தாய் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொல்லைக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்