Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Affair Murder: ரகசியம் கசிந்ததால் காதலனை ஏவி கணவனை கொலை செய்ய வைத்த, 3 குழந்தைகளின் தாயை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

Affair Murder: காதலியின் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர், ஊரைவிட்டே தப்பியோடியுள்ளார்.
காதலியின் கணவன் சுட்டுக் கொலை
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய தனது தகாத உறவு குறித்து அறிந்த, கணவனை தனது காதலனை வைத்து மனைவியே கொலை செய்துள்ளார். அந்த நபரின் உடல் மூன்று தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், ஊருக்கு வெளியே இருந்த ஒரு வயலில் கிடந்துள்ளது. கணவன் உயிரிழந்ததை அடுத்து கத்தி கதறி அழுத 3 குழந்தைகளுக்கு தாயான அந்த பின்,தொடர்ந்து தனது காதலனுடன் ஊரைவிட்டே ஓடியுள்ளார். ஆரம்பகட்டத்தில் வழிப்பறி சம்பவம் தான் கொலையாக மாறியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையின் விசாரணையால் ஒரு புதிய கதைக்கான சிறிய தொடக்கம் கிடைத்துள்ளது.
உண்மை அம்பலமானது எப்படி?
கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியை விசாரிக்க காவல்துறையினர் சம்பவம் நடந்த அக்வன்பூருக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அந்த பெண் இல்லை என்பதை அறிந்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு முடுக்கிவிடப்பட்ட விசாரணையில் தான், அஞ்சலி எனும் அந்த பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த அஜய் எனும் நபருடன், திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை அணுக முயன்றபோது தான் அவரும் வீட்டில் இல்லாதது தெரிய வந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்ட போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.
திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை
இதையடுத்து முடுக்கிவிடப்பட்ட விசாரணையில் தான், அஜய் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வாக்குமூலத்தின்படி, “கொலை செய்யப்பட்ட ராகுல் தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தனது கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ராகுலை சந்திக்க வேண்டும் என கூறி, சம்பவம் நடந்த குறிப்பிட்ட வயல் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோதே, மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து அஜய் 3 முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த ராகுல், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
தொடரும் தகாத உறவு கொலைகள்
இதே போன்ற திருமணத்தை மீறிய தகாத உறவால், மனைவியே தனது கணவனை கொலை செய்த சம்பவம் அக்வன்பூர் கிராமத்தில் ஏற்கனவே நடந்துள்ளது. காஜல் எனும் பெண் தனது கணவனுக்கு முதல் மயக்க மருந்தை கொடுத்து, பின்பு காதலனின் இருசக்கர வாகனத்தில் வைத்து வெகுதூரத்தில் இருந்த ஒரு கால்வாய் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தனது துப்பாட்டாவை வைத்து கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, உடலை நீரில் தூக்கிவீசியுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவது மீரட் மட்டுமின்றி ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்தையே உலுக்கியுள்ளது. இதே மாவட்டத்தில் தான், கடந்த மார்ச் மாதம் இளம்பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்து, கணவனை கொன்று நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு ட்ரம்மில் போட்டு சிமெண்டை கொட்டி நிரப்பியதும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.





















