மேலும் அறிய

Crime: தூக்கில் சடலமாக தொடங்கிய இளம்பெண்! சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரருக்கு தொடர்பா?

சூரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள மாடல் தன்யா சிங்கின் மரணத்தில், சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் சர்மாவிற்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில் உள்ளது சூரத். இங்கு வசித்து வந்தர் தன்யா சிங். 28 வயதான இவர் தனது பெற்றோடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் இருந்தார்.

இளம்பெண் மரணம்:

அவர் உயிரிழந்த அன்று, தன்யா சிங்கின் தந்தை பன்வர் சிங் தனது மகள் நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருப்பதாக கருதி அவரை எழுப்பச் சென்றுள்ளார். ஆனால், பன்வர் சிங் அவரது அறையை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அவரது தந்தை அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்து, தகவலறிந்த போலீசார் தன்யாசிங் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த தன்யா சிங், ஐ.பி.எல். கோப்பையை ஒரு முறை கைப்பற்றிய ஐதரபாத் அணிக்காக ஆடி வரும் ஆல் ரவுண்டர் அபிஷேக் சர்மாவின் தோழி என்பது தெரியவந்தது.

சன்ரைசர்ஸ் வீரருக்கு தொடர்பா?

இதையடுத்து, அவரது மரணத்திற்கும் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் அபிஷேக் சர்மா தன்யா சிங்கின் தொலைபேசி எண்ணையும், அவரது சமூக வலைதள கணக்குகளையும் தன்னுடைய செல்போனில் ப்ளாக் செய்து வைத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், தன்யா சிங் தனது செல்போனில் இருந்து அபிஷேக் சர்மாவிற்கு அனுப்பப்பட்ட மெசேஜ் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த குறுஞ்செய்திக்கு அபிஷேக் சர்மா எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும் பரபரப்பு:

மாடல் மற்றும் பேஷன் டிசைனராக உள்ள தன்யாசிங் மரணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அவரது மரணத்தில் ஐ.பி.எல். ஆடும் வீரருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற போலீசாரின் சந்தேகம் இன்னும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதே ஆன அபிஷேக் சர்மா 47 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 892 ரன்கள் எடுத்துள்ளார். ஆல் ரவுண்டரான அபிஷேக் சர்மா 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அபிஷேக் சர்மா 2018ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி வருகிறார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
"உங்களுக்கு ஆணவம் நல்லதல்ல" முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொதித்த ஆளுநர் ரவி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
California Wild Fire: 15 டிகிரி செல்சியஸ் குளிர்..! ஆனாலும் கொழுந்து விட்டு எரியும் கலிபோர்னியா நகரம், காரணம் என்ன?
California Wild Fire: 15 டிகிரி செல்சியஸ் குளிர்..! ஆனாலும் கொழுந்து விட்டு எரியும் கலிபோர்னியா நகரம், காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
"உங்களுக்கு ஆணவம் நல்லதல்ல" முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொதித்த ஆளுநர் ரவி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
California Wild Fire: 15 டிகிரி செல்சியஸ் குளிர்..! ஆனாலும் கொழுந்து விட்டு எரியும் கலிபோர்னியா நகரம், காரணம் என்ன?
California Wild Fire: 15 டிகிரி செல்சியஸ் குளிர்..! ஆனாலும் கொழுந்து விட்டு எரியும் கலிபோர்னியா நகரம், காரணம் என்ன?
பாகிஸ்தானில் கேட்ட பயங்கர சத்தம்! 6 பேர் பலி -  என்ன ஆச்சு?
பாகிஸ்தானில் கேட்ட பயங்கர சத்தம்! 6 பேர் பலி -  என்ன ஆச்சு?
7வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர்! பார்ட்டிக்கு போன இடத்தில் விபரீதம்! காரணம் என்ன?
7வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர்! பார்ட்டிக்கு போன இடத்தில் விபரீதம்! காரணம் என்ன?
Credit Card UPI: உங்கள் கிரெடிட் கார்டை UPI உடன் இணைப்பது எப்படி?  பரிவர்த்தனையை எளிமையாக்க வழிகள்..!
Credit Card UPI: உங்கள் கிரெடிட் கார்டை UPI உடன் இணைப்பது எப்படி? பரிவர்த்தனையை எளிமையாக்க வழிகள்..!
மக்களே! இன்று கனமழை இருக்கு! எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இதோ!
மக்களே! இன்று கனமழை இருக்கு! எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இதோ!
Embed widget