மேலும் அறிய

Minor Physical Abuse: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:இன்ஸ்பெக்டர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டு சிறை; 8 பேருக்கு ஆயுள்

சென்னை, வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உறவினர் 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், பா.ஜ.க. பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு புகார் ம அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிறுமியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. சிறுமியை பாலியல் தொழிலில் அவரை பராமரித்து வந்த உறவினர்களே ஈடுபட வைத்ததும், இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர், பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வந்ததும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுமி புகாரில் அளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்ததுடன், சிறுமியின் வாழ்வை சிதைத்த அவரது உறவினர்கள், வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான ராஜேந்திரன் ( வயது 44), எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி ( வயது 45) உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொறுப்பான காவல் ஆய்வாளர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் புகழேந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

600 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை கடந்தாண்டு பிப்ரவரி 16-ந் தேதி நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 96 நபர்களின் சாட்சியம் பெறப்பட்டது. விசாரணையின்போதே மாரீஸ்வரன் என்பவர் உயிரிழந்ததால், குற்றவாளிகளான 21 பேர் மீது விசாரணை நடைபெற்றது.

இந்த கொடூர சம்பவத்தில் 6 பெண்களும் குற்றவாளிகளாக இருந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப அளித்தது. அதில், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், காமேஸ்ராவ், முகமது அசாரூதின், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரண், ராஜசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ். வெங்கட்ராம் , கண்ணன் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மேற்கண்ட குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. மீதமுள்ள 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீதிமன்றம் விதித்துள்ளது.

மேலும் படிக்க : சல்லடை வைத்து சலிக்கும் போலீஸ்! பெட்ரோல் குண்டுவீச்சில் சிக்கிய 24 பேர்! வலையில் 250 பேர்

மேலும் படிக்க : நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Diwali Non Veg Celebration : பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Diwali Non Veg Celebration : பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
Rajini Wish Vijay:
Rajini Wish Vijay: "தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி" விஜய்யை வாழ்த்திய ரஜினிகாந்த்!
Amaran Twitter Review : துப்பாக்கியை தக்கவைத்து கொண்டாரா சிவகார்த்திகேயன்? அமரன் பட ட்விட்டர் விமர்சனம் சொல்வது என்ன?
துப்பாக்கியை தக்கவைத்து கொண்டாரா சிவகார்த்திகேயன்? அமரன் பட ட்விட்டர் விமர்சனம் சொல்வது என்ன?
IPL Retention 2025: இன்று ஐ.பி.எல். ரிட்டன்ஷன்! எத்தனை மணிக்கு? எப்படி பார்ப்பது? முழு விவரம்
IPL Retention 2025: இன்று ஐ.பி.எல். ரிட்டன்ஷன்! எத்தனை மணிக்கு? எப்படி பார்ப்பது? முழு விவரம்
Lucky Bhaskar Twitter Review : தீபாவளி ரேஸில் தாக்குபிடிப்பாரா துல்கர் சல்மான்...லக்கி பாஸ்கர் விமர்சனம் சொல்வது என்ன
Lucky Bhaskar Twitter Review : தீபாவளி ரேஸில் தாக்குபிடிப்பாரா துல்கர் சல்மான்...லக்கி பாஸ்கர் விமர்சனம் சொல்வது என்ன
Embed widget