மேலும் அறிய

watch video : பார்க்கிங் உதவியாளரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சிறுவர்கள் ! வெளியான சிசிடிவி காட்சி!

ஜாவேத்தின் ஒரு கண்ணில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அருகில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டெல்லியில் 36 வயதுடைய நபர் ஒருவரை சிறுவர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வழக்கு பின்னணி :

வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் வெள்ளிக்கிழமை மாலை 36 வயது  நபரை  நான்கு சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஜஹாங்கிர்புரியின் எச் பிளாக்கில் வசிக்கும் ஜாவேத் என்னும் அந்த நபர் அன்றாட வழக்கமாக மாலை தனது வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரை சாதாரணமாக கடந்து சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால்  ஜாவேத்தை நோக்கி சுட்டார். உடனே அங்கிருந்து சிறுவர்கள் நான்கு பேரும் தப்பித்து சென்றனர். அவர் சுடப்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட  ஜாவேத்தின் ஒரு கண்ணில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அருகில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காயத்தின் தீவிரம் காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலை முயற்சிக்கு காரணம் :

துப்பாக்கியால் சுட்ட நான்கு சிறுவர்களுக்கும் 16 முதல் 17 வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நான்கு பேருமே பள்ளியை இடையிலேயே நிறுத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது. மகேந்திரா பார்க் பகுதியில் பார்க்கிங் உதவியாளராக பணிபுரியும் ஜாவேத் ஏழு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட சிறுவர்களின் தந்தையில் ஒருவரை அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கும் நோக்கில் ஏழு மாதங்களாக பிளான் செய்து இந்த குற்றச்சம்வத்தை சிறுவர்கள் அரங்கேற்றியிருக்கின்றனர்.  ஜாவேத் சில காலங்கள் உத்திரபிரதேசம் சென்று சமீபத்தில்தான் டெல்லி திரும்பியிருக்கிறார். அதனால்தான் திட்டம் தாமதமானதாகவும் சிறுவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காட்டியது மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.16-17 வயதுடைய நான்கு சிறார்களுக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget