இருதரப்பினரிடையே மோதல் - எஸ்பி அலுவலகம் உள்ளே ஆம்புலன்ஸில் வந்த நபரால் மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி வந்து எஸ்பியிடம் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி வந்து எஸ்பியிடம் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆலங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். கூலி வேலை செய்பவர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17- ம் தேதி காணும் பொங்கல் அன்று ஊர்சார்பில் தமிழ்செல்வன் உள்ளிட்ட இளைஞர்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர்.
TN Weather: மாறி வரும் பருவநிலை.. நாளை முதல் வறண்ட வானிலையே இருக்கும்.. இன்றைய நிலவரம் என்ன?
அப்போது ஊர் சார்பில் நடைபெறும் விழாவில் ஊரில் வரி வாங்கி விஷேசம் நடத்தவில்லை என்றும், விழாவில் ரேடியோ போட்டால் தகராறு வரும் என கூறி ஊர் நாட்டாமையிடம் ராமச்சந்திரன் என்பவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கட்டை, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தமிழ்செல்வன் தாக்குதலுக்கு உள்ளானார். இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் குத்தாலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தமிழ்செல்வன் தரப்பை சேர்ந்த தாஸ், செல்வபிரகாஷ், ஜெய்காந்த், ஜெயகுமார், மோகன், கலைவேந்தன் ஆகியோர் மீதும்,
Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!
ராமச்சந்திரன் தரப்பை சேர்ந்த நவகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கரிகாலன், சரத்குமார், பாலா உள்ளிட்ட இரு தரப்பினர் மீதும் குத்தாலம் போலீசார் 147, 294(b), 324, 506(2) வழக்குப்பதிவு செய்தனர். ராமச்சந்திரன் தரப்பினர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த சூழலில் நவகிருஷ்ணன் என்பவர் வெட்டியதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்செல்வன் உடல்நலம் குணமடையாமல் படுத்த படுக்கையாக இருப்பதாக கூறிய தமிழ்செல்வனின் மனைவீ சங்கீதா மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் தமிழ்செல்வனை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
Vijay Vs SA Chandrasekar: தொடங்கிய அரசியல் பயணம்! விஜய் - எஸ்.ஏ. சந்திரசேகர் இடையே நடந்த மோதல்!
ஆபத்தான நிலையில் தமிழ்செல்வனுக்கு சிக்சையளிக்கப்பட்டு வருவதாகவும், போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தமிழ்செல்வனை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும், கூலி வேலை செய்யும் தமிழ்செல்வனுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க எதிர்தரப்பினரிடமிருந்து பணம் பெற்று தர வேண்டும் என்று கூறி புகார் அளித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழ்செல்வனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
LIC Movie: LIC பட ஷூட்டிங்கில் வேலையை காட்டிய நிஃபியா பர்னிச்சர் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!