மேலும் அறிய

Crime: காதல் மனைவியை கடத்திச் சென்று நடுவழியில் விட்டுச் சென்ற சைகோ கணவன் - நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் மனைவியைக் கடத்திச் சென்ற சைக்கோ கணவனுடன் சேர்ந்த வாழ ஒத்துழைக்காததால் ஒரு மாதத்துக்கு பிறகு சென்னையில் நடுத்தெருவில் மனைவியை விட்டுச் சென்றுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மைப் பணியாளரான இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, இவரது இளைய மகள் உமாமகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் 2020-ஆம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

காதல் திருமணம்:

இதனால், உமாமகேஸ்வரி மயிலாடுதுறை ஆராயத்தெரு அருகில் உள்ள குருக்கள் பண்டாரத்தெருவில் வாடகை வீட்டில் தனது தாய் தனலெட்சுமியுடன் தங்கி பணியாற்றி வந்தார். இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (தந்தை, கணவர் இருவரின் பெயரும் மாரிமுத்து) என்பவரை காதலித்து வந்த உமாமகேஸ்வரி, கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி தனது தாயின் விருப்பத்துக்கு மாறாக வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


Crime: காதல் மனைவியை கடத்திச் சென்று நடுவழியில் விட்டுச் சென்ற சைகோ கணவன் - நடந்தது என்ன?

மனைவியை கடத்திய கணவன்:

பின்னர் கணவருடன் மயிலாடுதுறையில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான நான்கே மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உமாமகேஸ்வரி, தனது கணவர் மாரிமுத்து சைக்கோ போல தன்மீது சந்தேகப்படுவதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் உமாமகேஸ்வரியை அவரது கணவர் மாரிமுத்துவிடம் இருந்து பிரித்து அழைத்துவந்து தாய் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

அப்போது, வீட்டைவிட்டு போகிறாயா? நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து,  ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்துசென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். 


Crime: காதல் மனைவியை கடத்திச் சென்று நடுவழியில் விட்டுச் சென்ற சைகோ கணவன் - நடந்தது என்ன?

இதுகுறித்து, தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் ஒருமாதமாகும் நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.


Crime: காதல் மனைவியை கடத்திச் சென்று நடுவழியில் விட்டுச் சென்ற சைகோ கணவன் - நடந்தது என்ன?

நடுரோட்டில் விட்டுச்சென்ற பரிதாபம்:

இந்நிலையில், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்த உமாமகேஸ்வரி, தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, குளோரோபார்ம் கொடுத்து மயக்கமடைய செய்ததாகவும், தொடாந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்ததாகவும், பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்ததாகவும், பின்னர் கணவனுடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
Embed widget