மயிலாடுதுறையில் பயங்கரம்.. பட்டப்பகலில் பெண்மணிக்கு 15 இடங்களில் கத்திக்குத்து
மயிலாடுதுறையில் 61 வயதான எதிர்வீட்டு பெண்மணியை பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் 61 வயதான மூதாட்டியை இளைஞர் ஒருவர் 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்தி குத்து
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மதுரா டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி 65 வயதான சேதுமாதவன் மற்றும் அவரது மனைவி 61 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் நிர்மலா தேவி. அவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் 24 வயதான பொறியியல் பட்டதாரி இளைஞர் பிரேம். இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் எதிர் எதிர் வீட்டு என்பதால், வாகனம் நிறுத்துதல், வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்தல் தொடர்பாக சிறு சிறு பிரச்சினைகளும், இதனால் முன்விரோதம் இருந்ததாக அப்பகுதியில் சொல்லப்படுகிறது.

தடுத்த கணவருக்கும் கத்தி குத்து
இந்நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்காக நிர்மலா வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது மீண்டும் பிரேமுக்கும் நிர்மலாவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம் குமார் வீட்டின் உள்ளே சென்று காய்கறிகள் அரியும் கத்தியினை எடுத்து வந்து நிர்மலாவை குத்தியுள்ளார். இதனால் காயமுற்ற நிர்மலாயினா அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் வெளியிலா வந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்... காதலியை காதலிகளுடன் கொன்ற காதலன் - நடந்தது என்ன?

தடுக்க முயன்ற பொதுமக்கள்
இருவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு பிரேமை கற்கள் கட்டைகள் கொண்டு அடித்துள்ளனர். ஆனால் எதற்கும் அச்சாத அவர் மீண்டும் ஆக்ரோஷமாக நிர்மலா தேவியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிர்மலாதேவிக்கு கத்தி குத்து ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இளைஞர் கைது
உடனடியாக அவரை மீட்க அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அடுத்து சம்பவம் இடத்துக்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பிரேம்குமார் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியாயமா? தொடர் வாக்குவாதம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசையை தட்டித்தூக்கிய போலீஸ்! சென்னையில் பரபரப்பு

பரபரப்பு
இந்நிலையில் படுகாயம் அடைந்த நிர்மலா தேவியினை தற்போது மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளைஞர் ஒருவர் 60 வயதான பெண்மணியை பொதுமக்கள் பலரும் தடுக்க முயன்றும், அதையும் மீறி 15 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான பரபரப்பு அடங்குவதற்கு முன்பே மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் ஒரு கத்தி குத்து சம்பவம் நடந்தேறியுள்ளது பொதுமக்கள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






















