சாமி சிலைகளுக்கு சொந்தம் கொண்டாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு
சாமி சிலை தொடர்பான பிரச்னையில் மயிலாடுதுறை நரிக்குறவர்களும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர்களும் காவல் நிலையம் முன்பு திரண்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள நரிக்குறவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே சாமி சிலைகள் வெள்ளியில் அமைக்கப்பட்டு அவற்றை குலதெய்வமாக அவர்கள் வழிபடுவது வழக்கம். இந்த சிலைகளை வைத்து தான் அவர்கள் திருமணத்தின் போது பெண் எடுப்பது உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களையும் மேற்கொள்வது வழக்கம்.
இதுபோல், அங்கு வசிக்கும் ஆனந்தன் என்பவர் குடும்பத்திற்கு சொந்தமான 11 சாமி சிலைகள் மற்றும் ஒரு புல்லாங்குழல் ஆகியவை பூஜிக்கப்பட்டு வந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த சாமி சிலைகளை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த துரைக்கண்ணு, சேகர், பிரபு, ரஜினி ஆகிய நான்கு பேர் சாமி சிலை மூட்டையுடன் திருடி சென்று விட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் மயிலாடுதுறை கிரைம் பிரிவு போலீசார் விசாரணை செய்து செஞ்சியில் இருந்து சுவாமி சிலைகளை கைப்பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
Gold, Silver Price: அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இனியும் தொடருமா...? இன்றைய நிலவரம் இதுதான்!
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சுவாமி சிலைகளை பல்லவராயன் பேட்டை ஆனந்தன் குடும்பத்திடம் காவல்துறையினர் ஒப்படைக்க இருந்தனர். இதுகுறித்து கேள்விப்பட்ட செஞ்சியை சேர்ந்த நரிக்குறவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நரிக்குறவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினர் கைப்பற்றி வந்த சாமி சிலைகள் நரிக்குறவர் சமுதாய மக்களின் பொது சொத்து என்று கூறி மயிலாடுதுறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் செஞ்சியைச் சேர்ந்த நரிக்குறவர்களுக்கிடையே காவல் நிலையம் முன்பு வாய்தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Udayanidhi Stalin Inspection: காலை உணவு திட்டத்தை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காவல்துறையினர் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சிலை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர் அவர்களை அனுப்பி வைத்தனர். நரிக்குறவர்கள் தங்களது மொழியில் ஒருவரை ஒருவர் தாக்கி நையாண்டி செய்து திட்டி வாக்குவாதம் செய்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மற்றும் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நரிக்குறவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் திரண்டு உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு முக்கியஸ்தர்களிடையே சிலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.