மேலும் அறிய

7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு

காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் வீட்டில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமம் தெற்கு தெருவை  சேர்ந்த பொண்ணையன் என்பவரின் மகள் 26 வயதான சுகப்பிரியா. இவர் சென்னையில் நர்சிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி மேலத்தெருவை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் 29 வயதான மகன் வினோத் வெளிநாட்டு வேலை பார்த்து வந்தவர் தற்போது டாடா ஏசி வாகனம் ஓட்டு வருகிறார். இந்நிலையில் சுகப்பிரியா வினோத் இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில்  சுகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக வினோத் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.


7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு

இதனால் இரண்டு முறை கரு கலைப்பு செய்ததாக கூறும் சுகப்பிரியா, மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாலி கட்டி தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலன் வினோத், கர்ப்பிணிகளுக்கு  தரும் சத்து மாத்திரை என்று  கூறி கருகலைப்பு மாத்திரையை ஏமாற்றி வாங்கி தந்து அதனை என்னை சாப்பிட வைத்து தன்னை ஏமாற்றி வயிற்றில் வளர்ந்த 3வது கருவை கலைத்து விட்டதாகவும். தற்போது என்னை நிராகத்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு

புகார் அளித்து 56 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள சுகப்பிரியா,   வினோத் வீட்டிற்கு சென்று வாசலில் அமர்ந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை செல்லமாட்டேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து வினோத் வீட்டில் இருந்த பெற்றோர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்ட நிலையில், வீட்டின் வாசல் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக காவல்நிலையத்தில் வினோத் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

"வயநாட்டுக்கு போகாமா போட்டி போடட்டும்" ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஸ்மிருதி இராணி


7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு

இந்நிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்று கூறியதன் பேரில் இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் பெற்று சென்றதால் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைத்ததாக கூறிய போலீசார், சுகப்பிரியா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வினோத்தை கைது செய்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல்  420, 417 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஏழு ஆண்டுகள் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்து விட்டு இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றது, இதனை அறிந்த காதலி காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தற்போது காதல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
Embed widget