மேலும் அறிய

அதிகாலை 3 மணி கொடூரம்! தோட்டத்தில் தொங்கிய காதலர்களின் சடலங்கள்: தற்கொலையா? ஆணவக்கொலையா?

மயிலாடுதுறை அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஆணவக்கொலை என குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் தென்னந்தோப்பு கீற்றுக் கொட்டகையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பெண் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் சாத்தங்குடி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரமும் இருவீட்டு மோதலும்

மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பார்த்திபன் (19). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கும், அருகிலுள்ள  கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சிறுமி நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, கல்லூரியில் சேருவதற்காகக் காத்திருந்தார்.வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதல் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதற்குப் பெண் வீட்டார் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடுமையான வாக்குவாதமும், பஞ்சாயத்துகளும் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்

காதல் விவகாரம் தொடர்பாகப் பெண் வீட்டார் தங்களுக்குத் தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் கொடுப்பதாகக் கூறி, வாலிபர் பார்த்திபனின் குடும்பத்தினர் நேற்று பொறையார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பெண் வீட்டார் மீது பட்டியல் இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் (PCR Act) நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது. காவல் துறையினர் இப்புகார் குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தனர்.

தோட்டத்தில் தொங்கிய சடலங்கள்

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள குமரவேல் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், சிறுமியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டனர். அதிகாலையில் அந்தப் பக்கமாகச் சென்ற கிராம மக்கள், கொட்டகையில் இரு உடல்கள் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கும், பொறையார் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை மற்றும் சாதி மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) சுரேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அங்கு திரண்டிருந்த இரு தரப்பு உறவினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், மோதல் போக்கும் ஏற்பட்டது.

உடல்களை மீட்க விடாமல் இரு தரப்பினரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், உயர் அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்விற்காக (Post-mortem) மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆணவக் கொலை என தரப்பு குற்றச்சாட்டு

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பார்த்திபனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். "எங்கள் மகன்  காதலித்ததால், பெண் வீட்டார் ஆத்திரத்தில் இருந்தனர். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருவரும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது தற்கொலை அல்ல; பெண் வீட்டாரே திட்டமிட்டு இருவரையும் அடித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை ஆணவக் கொலை வழக்கில் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என்று பார்த்திபனின் தரப்பினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கல்: கிராமத்தில் பதற்றம்

இதற்கிடையே, காதலர்களின் மரணச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த பார்த்திபனின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் சாத்தங்குடி கிராமத்திற்குள் புகுந்து, உயிரிழந்த சிறுமியின் உறவினர்களின் வீடுகள் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.

இந்தத் திடீர் தாக்குதலால் கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, சாத்தங்குடி மற்றும் புதுப்பாளையம் கிராமங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கூடுதல் போலீசார் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர விசாரணையில் போலீசார்

இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலர்கள் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வாலிபர் தரப்பு கூறுவது போல சாதி மறுப்புக் காதலால் பெண் வீட்டாரால் ஆணவக் கொலை (Honor Killing) செய்யப்பட்டார்களா? என்ற இரு கோணங்களிலும் போலீசார் தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget