மேலும் அறிய

கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!

புதைக்கப்பட்ட பெண் யார் என தீவிரமாக விசாரணை நடத்தியதில்  ஒடிசாவைச் சேர்ந்த 28 வயதான அனுசுயா என அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சாகர் சந்திர ராவத்தை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் காலி நிலம் ஒன்றை சுத்தம் செய்தபோது அதிலிருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் அப்பெண்ணின் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

பெங்களூரு மாநகரில் காலியாக உள்ள வீட்டு மனைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், கட்டிடக் கழிவுகள் மற்றும் புதர்களை உரிமையாளர்களே உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில் பெருநகர பெங்களூரு ஆணையம் களத்தில் இறங்கி அதனை செய்து வருகிறது.  அந்த வகையில் திருமேனஹள்ளி, எம்.எஸ். நகரில் வசிக்கும் கணேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 6 தொழிலாளர்கள் வருகை தந்தனர். புதர் மண்டிப்போயிருந்த அந்த நிலத்தில் சுமார் பாதியைச் சுத்தம் செய்த நிலையில் மற்றொரு பாதியை சுத்தம் செய்ய நினைத்தனர். 

அங்கு  புதர் மண்டி வளர்ந்திருந்த செடிகளை அகற்றியபோது ஒரு பெட் கிடப்பதைக் கண்டனர். அந்த தொழிலாளர்கள் அதனை அகற்றிய நிலையில் ஒரு கால் போன்ற ஏதோ வெளியில் தெரிந்துள்ளது. ஆரம்பத்தில் பழைய கட்டிலின் கால் என நினைத்து வெளியே இழுத்துள்ளனர். ஆனால் வரவில்லை. வலுகொடுத்து இழுத்த நிலையில் அது ஒரு பெண்ணின் உடல் என தெரிய வந்தது. உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும்  சடலம் கிடைத்த இடம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதாகவும், நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். புதைக்கப்பட்ட பெண் யார் என தீவிரமாக விசாரணை நடத்தியதில்  ஒடிசாவைச் சேர்ந்த 28 வயதான அனுசுயா என அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சாகர் சந்திர ராவத்தை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது, “அனுசுயாவும் சாகரும் பணி காரணமாக பெங்களூருக்கு வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். வெவ்வேறு ஹோட்டல்களில் பணிபுரிந்த இவர்களிடையே பணப் பிரச்னை வெடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அனுசுயா சாஹர் பணியாற்றிய ஹோட்டலுக்கு சென்று அவரது சம்பளம் பற்றி வாக்குவாதம் செய்துள்ளார். வீட்டிற்கு வந்தும் இருவருக்குள்ளும் சண்டை முற்ற கோபத்தில் சாகர், அனுசுயா கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் மனைவி உடலை 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்திருந்து, பின்னர் ஒரு மெத்தையில் சுருட்டி கயிறால் கட்டி அதனை அந்த காலி இடத்தில் வீசி எறிந்துள்ளார். சரியாக 20 நாட்கள் கழித்து அந்த இடத்திற்கு வந்த சாகர், யாராவது அனுசுயா உடலை பார்த்துள்ளதாக என நோட்டமிட்டுள்ளார். இது அடுத்தடுத்த வாரங்களுக்கும் தொடர்ந்துள்ளது. அனுசுயா அணிந்திருந்த ஆடையின் விலை அடங்கிய டேக் தான் இந்த பிரச்னையை போலீசார் தீர்க்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு நகரத்தை அதிர வைத்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget