மேலும் அறிய

மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!

மயிலாடுதுறையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸும் மாநில அளவில் இணக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில், மயிலாடுதுறையில் இன்று அரங்கேறிய வன்முறைச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளைத் திமுகவினர் ஓட ஓட விரட்டித் தாக்கியதோடு, அக்கட்சியின் கொடிகளை நடுரோட்டில் போட்டுச் காலணியால் மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்ற தவெகவினர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் சமீபத்தில் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் தனி பெரும்பான்மையுள்ள தவெகவை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காததால் அவரது செயல்பாடுகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது‌. அதன் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பொறுப்பு கவர்னருக்கு எதிராகக் கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நிறைவடைந்தது.

மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...! pic.twitter.com/XjNeNIGCz5

— JAGANNATHAN (@Jaganathan_JPM) May 8, 2026

">

ஓட ஓட விரட்டப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்ற நிலையில், மாவட்டத் தலைவர் பானுசேகர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் பேருந்து நிலையம் அருகிலேயே குழுவாக நின்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமையில் திரண்டு திமுகவினர், அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திடீரெனப் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடி, சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இந்தத் திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய காங்கிரஸ் கட்சியினர் சாலையில் விழுத்து சிதறி ஓடினர்.

திமுகவினரின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர், பொறுப்பாளர் ராஜா மற்றும் மணல்மேடு அன்பழகன் ஆகியோர் காயமடைந்தனர். குறிப்பாக, தாக்குதலின் போது நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜா என்பவரைத் திமுகவினர் காலால் எட்டி உதைத்ததில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.

கட்சி கொடிகள் அவமதிப்பு: காலால் மிதித்த திமுகவினர்

வன்முறையின் உச்சகட்டமாக, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுகவினர் பிடுங்கி எறிந்தனர். பின்னர், அந்தக் கொடிகளை நடுரோட்டில் வீசி எறிந்து, அவற்றைத் தங்கள் கால்களாலும் காலணிகலும் மிதித்துத் துவம்சம் செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அங்கேயே திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கட்சியின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களை மட்டுமன்றி, அரசியல் நோக்கர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "கூட்டணிக் கட்சியாக இருந்த கட்சி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இப்படிப் பகிரங்கமாக ஒரு தேசியக் கட்சியின் கொடியை அவமதிப்பது முறையா?" என அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" அண்ணி தங்கையை காதலிக்க சொல்லி டார்ச்சர் " சட்டக் கல்லூரி மாணவர் கொடூர கொலை
மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
Embed widget