மேலும் அறிய

அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுப்பிரிவு ஐஜி ஆகியோர் மீது விசாரணை தேவை மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து பணிக்கு சென்ற டிஎஸ்பி 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் என்பவரது வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அமைச்சர் மெய்யநாதனின் விஐபி பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு, பழுதடைந்த வாகனத்தை கொடுத்ததாகவும், அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று கூறி டிஎஸ்பி சுந்தரேசன் மீண்டும் காவல்துறையில் ஒப்படைத்துவிட்டு பணிகளை தொடர்ந்ததாகவும், இந்நிலையில் இன்று வழக்கமான பணிகளை கவணிக்க வீட்டிலிருந்து நடந்து வந்துள்ளார். 


அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி

ஏடிஜிபி, ஐஜி தூண்டுதலின் பேரில் டார்ச்சர் 

இது குறித்த வீடியோ ஊடகங்களில் செய்தியாகி வைரல் ஆன நிலையில், காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கில் தனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் தூண்டுதல் பெயரில் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக தன்னை டார்ச்சர் செய்வதாக பரபரப்பு குற்றம் சாட்டை தெரிவித்தார். 


அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி

அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார்

மேலும் நேர்மையான போலீஸ் அதிகாரியான தனக்கு நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில், தான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால், நான் ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நான் லஞ்சமாக ஏசி வாங்கியதாக கூறுகின்றனர். தான் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு தனது உயிர் முக்கியம் இல்லை என்றும், ஆனால் தனது குடும்பத்திற்கு தன்உயிர் முக்கியம் எனவும், வளைந்து செல்லாவிட்டால் ஒடிக்கப்படுவீர்கள் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனக்கு சைகை காட்டியதாகவும், லஞ்சம் ஊழல் இவற்றில் இருக்கும் அதிகாரிகளுக்கு வசூல் செய்யாத நேர்மையான காவல்துறையினர் பழிவாங்கப்படுவார்கள்.


அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி

காவல் துறை யாருக்கு பாதுகாப்பு இல்லை 

தான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான் இந்த பேட்டி அளிப்பதாகவும், சிறப்பு தனிப்படை பிரிவை வைத்து உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் பணம் வாங்கப்படுகிறது. அதிகாரிகள் செய்யும் தவறுக்கு காவல் துறையினர் பாதிக்கப்படுகின்றனர். இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.


அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி

மறுப்பு தெரிவித்த எஸ்.பி

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மயிலாடுதுறை காவல்துறை சார்பில் இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளது, அவர் மீது என்ன விதமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விசாரணைக்கு பின்னே தெரியவரும் என்றும், லஞ்சம் ஊழல் எதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை அவர் தவறான தகவலை கூறி வருகிறார் என தெரிவிக்கிறார் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!
பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!
Crime News: சுகர் டாடியால் வந்த வினை.. மனைவியின் தலை துண்டிப்பு, குடும்பமே காலி - கணவன் விபரீத முடிவு
சுகர் டாடியால் வந்த வினை.. மனைவியின் தலை துண்டிப்பு, குடும்பமே காலி - கணவன் விபரீத முடிவு
EMI கட்டுவதில் தகராறு.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை... உடலை புதைத்த காதலன்!
EMI கட்டுவதில் தகராறு.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை... உடலை புதைத்த காதலன்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Embed widget