Crime: மூட்டை மூட்டையாக சொகுசு காரில் கடத்தப்பட்ட பாண்டி சாராயம் - வளைத்து பிடித்த போலீஸ்
மயிலாடுதுறை அருகே காரில் கடத்திவரப்பட்ட 800 லிட்டர் சாராயம் பறிமுதல். தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 800 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து கடத்தப்படும் பாண்டி சாராயம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது. இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மாநில மது விற்பனை என்பது தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
நெல்லை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 14 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை..
போலீசார் வாகன சோதனை
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாண்டி சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவல்லி தலைமையில் போலீசார் வழுவூர் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வழுவூர் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த காரினை நிறுத்தி உள்ளனர்.
crime: கிரிவலப் பாதையில் ஒரே மாதத்தில் 19 பைக் திருட்டு - பலே திருடர்கள் சிக்கியது எப்படி.?
சொகுசு காரில் பிடிபட்ட பாண்டி சாராயம்
அப்போது காரை ஓட்டி வந்த நபர் போலீசாரை கண்டதும் காரை அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளார். பின்னர் காவல் துறையினர் காரினை சோதனை செய்தபோது 800 லிட்டர் சாராயம் மூட்டை மூட்டையாக அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். கிட்டத்தட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாராயத்தை கடத்தி வந்து தப்பிச்சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விபத்துக்குள்ளாகி சாலையில் நின்ற கார் - சக்கரங்களை களவாடி சென்ற திருடர்கள்