மேலும் அறிய

வீட்டை தீயிட்டு கொழுத்திய வழக்கு: 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

வீட்டில் உள்ள பொருட்களை திருடி வீட்டை தீயிட்டு கொழுத்திய வழக்கில் ஒரு பெண் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த  அகரகீரங்குடி உடையார் தெருவை சேர்ந்தவர்  நடராஜன் என்பரின் மகன் விமல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் தங்கை கணவர் மின்டோ மார்லின் என்கிற பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் விமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் நடராஜனுக்கும், குணசேகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

வீட்டை தீயிட்டு கொழுத்திய வழக்கு: 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

இந்த கொலை வழக்கு பிரச்சனை காரணமாக கடந்த 2014 ம் ஆண்டு வீட்டை பூட்டிவிட்டு நடராஜன் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அப்போது பூட்டியிருந்த நடராஜனுடைய கூரை வீட்டில் புகுந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்கள் இருசக்கர வாகனம்  மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்றதோடு, வீட்டை அடித்து உடைத்து தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுவிட்டனர். இந்த தீ விபத்தில் நடராஜன் வீடு எரிந்து தரைமட்டமாகின. 

வீட்டை தீயிட்டு கொழுத்திய வழக்கு: 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல்நிலையத்தில் குணசேகரன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 58 வயதான குணசேகரன், 70 வயதான பாலையன், 33 வயதான கார்த்திக், 48 வயதான பெரியமுனுசாமி, 43 வயதான உஷா, 45 வயதான சின்ன முனுசாமி மற்றும் 69 வயதான தியாகராஜன் ஆகிய 7 பேருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்,  8 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் தலா 8 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ராம.சேயோன் ஆஜரானார். தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் சாலை மறியல். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  உள்ளது. இந்த மருத்துவமனையில் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், வளையல்சோழகன், உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான மருத்துவமனையாக உள்ளது. இந்தநிலையில்  பிள்ளை பெருமாள் நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயந்தி நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் அவரை அருகிலுள்ள திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

வீட்டை தீயிட்டு கொழுத்திய வழக்கு: 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஜெயந்தி உயிரிழந்ததாக கூறி திடீரென ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நாகப்பட்டினம் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் குமரகுருபரன்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!
சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!
சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை: குறுக்கே வந்த மழை.. பாகிஸ்தான் - இலங்கைக்கு எமனாய் மாறிய போட்டிகள்!
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை: குறுக்கே வந்த மழை.. பாகிஸ்தான் - இலங்கைக்கு எமனாய் மாறிய போட்டிகள்!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Vijaya Prabhakaran: அப்பா இல்லாத முதல் தந்தையர் தினம்! விஜயகாந்தை நினைத்து விஜய பிரபாகரன் கண்ணீர் பதிவு!
Vijaya Prabhakaran: அப்பா இல்லாத முதல் தந்தையர் தினம்! விஜயகாந்தை நினைத்து விஜய பிரபாகரன் கண்ணீர் பதிவு!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Embed widget