மேலும் அறிய

மயிலாடுதுறை: வாய்க்காலை ஆக்கிரமித்து வீட்டுமனை.. மிதக்கும் குடியிருப்புகள்!

மயிலாடுதுறை அருகே காவேரி தண்ணீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் என்ற தனி நபர், ஸ்ரீ நாராயணபுரம் என்ற பெயரில் வீட்டு மனைகளுக்கான ப்ளாட் அமைத்துள்ளார். அந்த வீட்டுமனை அருகில் சென்ற வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து அதில் மணலை கொட்டி குறுக்கே மண்சாலை அமைத்து வீட்டுமனைகளுக்கு செல்ல பாதையை உருவாக்கி அந்த வீட்டுமனைகளை விற்பனை செய்துள்ளார். தற்போது அங்கு 350 பேர் இடம் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். 

மயிலாடுதுறை: வாய்க்காலை ஆக்கிரமித்து வீட்டுமனை.. மிதக்கும் குடியிருப்புகள்!

இந்நிலையில் 45 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலை  கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் நிதி திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரினர். இந்த சூழலில் வாய்க்காலை அடைத்து சாலை அமைக்கப்பட்ட பகுதியில் வாய்க்காலை மீண்டும் தோண்டி வாய்கால் மேல் பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள்  கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொதுப்பணித்துறையினர் வாய்க்காலின் குறுக்கே  அமைக்கப்பட்டிருந்த சாலையில் பாலம் கட்டாமலும், தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தராமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். 

மயிலாடுதுறை: வாய்க்காலை ஆக்கிரமித்து வீட்டுமனை.. மிதக்கும் குடியிருப்புகள்!

இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் இருந்து முத்தப்பன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, ஸ்ரீ நாராயணபுரத்தில் வாய்கால் குறுக்கே உள்ள சாலையால் தண்ணீர் செல்ல வழியின்றி மயிலாடுதுறை அடுத்த அபயாம்பாள்புரத்தில் என்ற இடத்தில் வாய்கால் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், வாய்காலில் அடைக்கப்பட்ட பகுதியில்  ஒருபுறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்றொருபுறம் வாய்கால் வறண்டு தரிசாக காணப்படுகிறது. 

மயிலாடுதுறை: வாய்க்காலை ஆக்கிரமித்து வீட்டுமனை.. மிதக்கும் குடியிருப்புகள்!

தண்ணீர் செல்ல வழியில்லை என்று தெரிந்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நகரில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறி விட்டுமனையின் விலையை விட  ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, இடத்தை விற்பனை செய்த பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் தண்ணீர்செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: வாய்க்காலை ஆக்கிரமித்து வீட்டுமனை.. மிதக்கும் குடியிருப்புகள்!

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வீட்டு மனையாக மாற்றப்பட்ட பல இடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக ஆக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு மழை காலங்களிலும் பல்வேறு ஊர்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சொல்வது தொடர்கதையாக இருந்து வருவதும், அதற்கான காரணம் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததுதான் என பல செய்திகள் வெளிவந்தாலும், வீட்டு மனைகளை வாங்கும் பொதுமக்கள் அதனை ஆராய்வது இல்லை என்றும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளை உருவாக்குபவர்களுக்கு, அதிகாரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அங்கீகாரம் அளித்து விடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளவர்கள் இனிவரும் காலங்களில் ஆவது அதிகாரிகள்  நீர்நிலைகளை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தினமும் குடித்து விட்டு டார்ச்சர் செய்த மகன் !! ஆத்திரத்தில் தீ வைத்து கொன்ற தந்தை
தினமும் குடித்து விட்டு டார்ச்சர் செய்த மகன் !! ஆத்திரத்தில் தீ வைத்து கொன்ற தந்தை
மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Embed widget