மேலும் அறிய

போலீஸ் மனைவி, 2 வயது குழந்தை கொடூர கொலை.. ஆத்திரத்தில் இளைஞர் வெறிச்செயல்... நடந்தது என்ன?

புனேவில் 2 வயது பெண் குழந்தை மற்றும் போலீஸ் வேலை பார்த்த மனைவியை கணவனே கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது புனே மாவட்டம். மிகவும் முக்கியமான மாவட்டமான இங்குள்ளது சிக்லி கிராமம். பிம்ப்ரி – சிஞ்ச்வாத் தாலுகாவிற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் வசித்து வருபவர் வர்ஷா. இவர் சிக்லி காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார்.

வர்ஷாவின் கணவர் கிஷோர். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு 8 வயதும், மற்றொரு மகளுக்கு 2 வயதும் ஆகும். வர்ஷாவிற்கும் அவரது கணவர் கிஷோருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி, மகள் குத்திக்கொலை:

இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே நேற்றும் வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டைக்கு பிறகு வர்ஷா பணிக்கு சென்றுவிட்டார். பின்னர், பணியில் இருந்து நேற்று இரவு வர்ஷா வீடு திரும்பியுள்ளார். வீட்டில் அவர்களது மகள் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.  

காலையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கிஷோர் மிகவும் ஆத்திரமாக இருந்துள்ளார். இந்த சூழலில்,வர்ஷா பணியில் இருந்து திரும்பிய சூழலில், கிஷோர் கையில் கூர்மையான கத்தியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த வர்ஷாவை தன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார் கிஷோர். மேலும், ஆத்திரத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் தனது 2 வயது மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

கணவன் தற்கொலை:

பின்னர், தன்னுடைய மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கங்கல்காவ்ன் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், சடலம் தொங்குவதை கண்ட அந்த பகுதி போலீசார் அது யார்? என்று குழப்பம் அடைந்துள்ளனர். பின்னர், மோட்டார்சைக்கிள் எண்ணை கொண்டு விசாரித்தபோது அது கிஷோர் என்றும், தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.  

இந்த சோகத்திலும் அதிர்ஷ்டவசமாக அவர்களது 8 வயது மகள் பள்ளி சென்றிருந்ததால் அவர் உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே தனது மனைவி மற்றும் 2 வயது மகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்க: Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மேலும் படிக்க: Crime: "தண்ணி வேணுமா.. இந்தா சிறுநீரை குடி.." பட்டியலின இளைஞரை தாக்கி அராஜகம் செய்த போலீஸ் எஸ்.ஐ..!

தலைப்பு செய்திகள்

" வேலை வேண்டுமா " இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! சிக்கிய 37 வயது ஜிம் பயிற்சியாளர்
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
Embed widget