மேலும் அறிய

Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?

Sabarivarman post-mortem report : சிறையில் மரணம் அடைந்த சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தலையில் 2 இடங்களில், இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் 7 செ.மீட்டர் அளவில் காயம் உள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டது.

சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது கடையில் புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறி தென் தாமரைக்குளம் காவலர்கள் சபரிவர்மனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கடந்த 9 ஆம் தேதி  நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி காலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருந்த போது சபரிவர்மனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் போலீசார் சபரிவர்மனை அடித்து கொலை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபரிவர்மன் உடலை பெற மாட்டோம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

நீதிமன்றக்காவலில் மரணம்-உதயநிதி கேள்வி

இதனிடையே சபரிவர்மன் மரணம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தது. எதிர்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்ட பதிவில்,  நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதேப்பரிசோதனையில் ஷாக் தகவல்கள்

இந்த நிலையில் நேற்று சபரிவர்மனின் உடலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர்  பிரேதப் பரிசோதனை செய்தனர். இதன் முடிவில் ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், மரணம் அடைந்த சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தலையில் 2 இடங்களில் பலத்த காயமும், இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் 7 செ.மீட்டர் அளவில் காயம் உள்ளதும் கண்டறியப்பட்டது. அடுத்தாக பின்னந்தலை மற்றும் பின்னங்கழுத்து பகுதியிலும் காயங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. வலது கையில் 6 இடங்களிலும், இதே போல இரண்டு கால்களிலும் கடுமையான காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

3 போலீஸ் கைது

எனவே போலீசார் சபரிவர்மனை அடித்ததில் தான் உயிரழிந்த்தாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget