மேலும் அறிய

14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

’’பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தீர்ப்பு வந்த 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் 5 லட்சம் அரசு சார்பில் நஷ்ட ஈடு தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவு’’

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (22) தொழிலாளி. இவர் 10ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்தார். மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு  அன்று அந்த சிறுமியை, சின்னதுரை மற்றும் அவரது நண்பர்கள் கீழ்ஆதனூர் மாயவேல், செவ்வேரியை சேர்ந்த பிரதாப், சரத்பாபு ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றனர். பின்னர் சின்னதுரையையும், அந்த சிறுமியையும் நண்பர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வந்தனர். இதை அறிந்த சின்னத்துரை, அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தொழுதூருக்கு தப்பிச்சென்று உள்ளனர். இதை நோட்டமிட்ட காவல் துறையினர், அவர்களை பிடித்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 

14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
 
இதையடுத்து சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சின்னதுரை மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக மாயவேல், பிரதாப், சரத்பாபு ஆகிய 4 பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வெகு நாட்களாக நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கு நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
 

14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
 
அவர் தனது தீர்ப்பில், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக சின்னதுரைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனையை சின்னதுரை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். சின்னதுரையுடன் கைதான மாயவேல், பிரதாப், சரத்பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தீர்ப்பு வந்த 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் 5 லட்சம் அரசு சார்பில் நஷ்ட ஈடு தொகையை வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பின் சார்பாக வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

தலைப்பு செய்திகள்

சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget