மேலும் அறிய

‛வாட்ஸ் அப்’ அந்தரங்க உரையாடல்... சென்னை மாணவியை மிரட்டிய வாலிபர் கைது!

சென்னை: கல்லூரி மாணவி ஒருவரிடம் பணம், நகை மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களால் ஏற்படும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. டிக் டாக், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சமூக வலைதளங்களில் கிடைக்கும் நண்பர்களிடம் கள்ளக்காதல் ஏற்பட்டு திருமணமானவர்கள் கூட தங்களின் குழந்தைகளை கொன்றுவிட்டு அவரோடு சென்றுவிட்ட சம்பவங்களும் இங்கே நிகழ்ந்து உள்ளன. 

அவர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களின் அந்தரங்க காரியங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பணம் நகை ஆகியவற்றை பறிப்பதற்காக ஒரு கும்பலே வலம் வந்து கொண்டிருக்கின்றன. அது போன்ற சம்பவம் தான் சமீபத்தில் சென்னையில் அரங்கேறி உள்ளது.

கல்லூரி மாணவி ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஃபேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமான நபர் ஒருவர் தன்னை காதலிப்பதாக கூறி பணம் நகைகளை ஏமாற்றி பறித்து உள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார்.


‛வாட்ஸ் அப்’ அந்தரங்க உரையாடல்... சென்னை மாணவியை மிரட்டிய வாலிபர் கைது!

இந்த புகார் மனுவின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர், இதற்கென ஒரு தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், புகார் கொடுத்த மாணவியை ஏமாற்றி பணம் பறித்தவர் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், புகார் கொடுத்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் நண்பராகி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்படியே பேசி அவருடைய வாட்ஸ்அப் நம்பரை வாங்கி உள்ளார். அதன் மூலம் இருவரும் நெருக்கமாக பேசி உள்ளனர்.

பின்னர் தன்னுடைய சுயரூபத்தை லோகேஷ் காட்டி உள்ளார், அந்தப் பெண்ணிடம் பணம் நகை கேட்டு மிரட்டி உள்ளார், இதனை தரவில்லை என்றால் நாம் இருவரும் வாட்ஸ் அப்பில் பேசிய பற்றி உனது பெற்றோரிடம் காட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து மாணவி அவரிடம் 17 ஆயிரம் ரூபாய் பணமும் 13.5 சவரன் தங்க நகையும் கொடுத்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.


‛வாட்ஸ் அப்’ அந்தரங்க உரையாடல்... சென்னை மாணவியை மிரட்டிய வாலிபர் கைது!

மேலும் கைது செய்யப்பட்ட லோகேஷ் செல்போனை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில், பல பொய்யான பெயர்களை பயன்படுத்தி சென்னை கோயம்புத்தூர் திண்டுக்கல் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களையும் ஏமாற்றி உள்ளார்.

அது மட்டுமில்லாது புதுச்சேரி மலேசியா பெண்களையும் காதல் வார்த்தைகள் கூறி பொய்யாக நடித்து இந்த லோகேஷ் ஏமாற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget