![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நள்ளிரவு போதை பார்ட்டி.. 4 நடிகை உள்ளிட்ட 22 பேரை மடக்கிப்பிடித்த போலீசார்..!
நள்ளிரவு போதை பார்ட்டியில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
![நள்ளிரவு போதை பார்ட்டி.. 4 நடிகை உள்ளிட்ட 22 பேரை மடக்கிப்பிடித்த போலீசார்..! Maharashtra Police Busts Rave Party at Nashik Villas; 12 Women Including Ex-Bigg Boss Contestents நள்ளிரவு போதை பார்ட்டி.. 4 நடிகை உள்ளிட்ட 22 பேரை மடக்கிப்பிடித்த போலீசார்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/28/19d1abbdb8d1ea5408ef3596d9ed6fef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நள்ளிரவு போதை பார்ட்டியில் ஈடுபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர், சீரியல் நடிகைகள் உள்ளிட்ட 22 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
மகாராஷ்டிரா நாசிக்கில் உள்ள இரண்டு ரெசார்ட்டுகளில் நள்ளிரவு போதை பார்ட்டி களைகட்டியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. இதனையடுத்து பார்ட்டி நடைபெறும் இடத்துக்கு கும்பலாக சென்ற போலீசார் 22 பேரை சுற்றி வளைத்தனர். இந்த போதைப்பார்ட்டியில் இந்தி பிக்பாஸ் பங்கேற்பாளர் ஒருவர் உள்ளிட்ட நடிகைகள் 4 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மும்பையில் இருந்து சுமார் 120 கிமீ தூரத்தில் அமைந்துள்ள காட்புரி என்ற இடத்திலுள்ள இரண்டு ரெசார்ட்டுகளில் இந்த போதை பார்ட்டி நடந்துள்ளது. பல விதமான போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போதை பார்ட்டியை போலீசார் சுற்றி வளைத்த போது பலர் போதையில் நினைவிழந்து இருந்ததாகவும், அரைகுறை ஆடையில் கிடந்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
மது வெறியால் கொடூரம் : நடுத்தர வயது ஆணை கொலை செய்த மூன்று சிறுவர்கள்..!
இது குறித்து தெரிவித்த ஆய்வாளர் சச்சின் பாடில், மொத்தம் கைது செய்யப்பட்ட 22 பேரில் 12 பெண்கள், 10 ஆண்கள் அடங்குவர். அதில் 4 பெண்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். அதில் ஒரு பெண் பிக்பாஸில் பங்குபெற்றவர். மருத்துவ பரிசோதனைக்காக அனைவரும் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த போதை பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபரை கட்டிவைத்து சொத்துக்களை எழுதிவாங்கிய போலீஸ்..! 10 பேர் மீது சிபிசிஐடி வழக்கு..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)